இனி ’ஃபேஸ்புக் வாட்ச்’- ல் வீடியோக்களை பார்க்கலாம்

இளைஞர்களை கவரும் வகையில் புதிய வீடியோ சேவையை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.  

இன்றைய இளைஞர்கள் தொலைகாட்சியை பார்ப்பதை விட, ஸ்மார்ட்போன்களில் வீடியோகளை பார்ப்பதையே அதிகம் விரும்புகின்றனர். அவர்களது உலகமே ஸ்மார்ட்போனில் அடங்கிவிட்டது. இந்நிலையில் பிரபல சமூகவலைதளங்களில் ஒன்றான பேஸ்புக் நிறுவனம் பேஸ்புக் வாட்ச் எனும் புதிய வீடியோ பிளாட்பார்ம் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

அண்மையில் பேஸ்புக் நிறுவனம் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை அறிமுகம் செய்து இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து, பேஸ்புக் வாட்ச் எனும் புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது. 

’பேஸ்புக் வாட்ச்’ மூலம் நேரடி ஒளிபரப்புக்கள் மற்றும் எக்ஸ்குளூசிவ் வீடியோக்கள் போன்றவற்றை பார்க்கலாம். ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் டெஸ்க்-டாப் மற்றும் பேஸ்புக் தொலைக்காட்சி ஆப் போன்றவற்றின் மூலம் இந்த சேவையை பயன்படுத்த முடியும். தற்போது அமெரிக்காவில் மட்டுமே இந்த வசதி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

’பேஸ்புக் வாட்ச்’ பக்கத்தில் அதிகம் பகிரப்பட்ட வீடியோக்கள் ’Most Talked About’ என்ற பிரிவிலும், அதிக கமெண்ட்களை பெற்ற வீடியோக்கள் என பல வீடியோக்களை பார்த்து மகிழலாம். விரைவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்கள் போன்றவையும் சேர்க்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...