அமோக வரவேற்பில், நோக்கியா 6: லட்சக்கணக்கானோர் முன்பதிவு

நோக்கியா 6 ஸ்மார்ட்ஃபோனிற்காக தற்போது வரை 10 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ளனர். 

நோக்கியா மொபைல்கள் மீண்டும் வெளிவந்து வாடிக்கையாளர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நோக்கியா 6 ஸ்மார்ட்ஃபோன் ஆகஸ்ட் 23ம் தேதி வெளி வருகிறது. அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் நோக்கியா 6-க்கான முன்பதிவுகள் ஜூலை 14-ம் தேதி தொடங்கியது. இந்த ஸ்மார்ட்ஃபோனை வாங்க தற்போது வரை 10 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர் என அமேசான் தெரிவித்துள்ளது. 




இந்த போனின் சிறப்பம்சங்கள்:

5.5 இன்ச் ஹெச்.டி.தொடுதிரை, ஆடியோ டூயல் ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆம்ப்ளிஃபையர், 2.5டி ஸ்கிரீன் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, கைரேகை ஸ்கேனர், 7.0 நௌகட் ஸ்னாப் டிராகன் 430 SoC, 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்பில்டு ஸ்டோரேஜ், மைக்ரோ SD 128ஜிபி, உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

3000 mAh பேட்டரி திறன் கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோனில் 16 மெகாபிக்சல் கொண்ட கேமரா, 8 மெகா பிக்சல் முன்பக்க கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட இந்த நோக்கியா 6, மேட் பிளாக், சில்வர், டெம்பர்டு ப்ளு, மற்றும் காப்பர் உள்ளிட்ட நான்கு நிறங்களில் கிடைக்கிறது. 

இதன் விலை 14,999 ரூபாய் ஆகும். மேலும், அமேசான் தளத்தில் நோக்கியா 6 வாங்கும் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 1,000 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...