உருகாத ஐஸ்கிரீம்கள் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ஐஸ்க்ரீம் உருகுவதைத் தடுக்க ஜப்பான் விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர். 

ஜப்பான் நாட்டில் உள்ள கனஜவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஐஸ்க்ரீம் உருகி அதன் வடிவம் மாறாமல் இருக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் மூன்று மணி நேரத்துக்கு அந்த ஐஸ்க்ரீம் உருகாமல் இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ட்ராபெரி பழத்திலிருந்து எடுக்கப்படும் பாலிஃபினல் என்ற திரவத்தை ஐஸ்க்ரீமில் செலுத்தி சோதனையில் வெற்றி அடைந்துள்ளனர். இந்த திரவத்தை செலுத்தியபின் ஐஸ்கீரிமை அனல் காற்றில் காண்பித்தாலும் சுமார் 5 நிமிடம் வரை ஐஸ்க்ரீமின் வடிவம் மாறவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...