ப்ளிப்கார்ட் பிக் ப்ரீடம் சேல் : என்னென்ன சலுகைகள், விலைகுறைப்பு.?

அமேசான் அதன் அடுத்த விற்பனை தேதிகளை வெளிப்படுத்திய சில நாட்களுக்குப் பின்னர், ப்ளிப்கார்ட் அதே நேரத்தில் அதன் சுதந்திர தின விற்பனையை ஏற்பாடு செய்யும் என்று அறிவித்துள்ளது. இந்த ப்ளிப்கார்ட் விற்பனையானது ஆகஸ்ட் 9-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி முடிவடைகிறது.

இந்த விற்பனையில் மொபைல் போன்கள், டிவிக்கள், மடிக்கணினிகள், டேப்ளெட்கள், ஹெட்போன்கள், கேமராக்கள் மற்றும் இதர பாகங்கள் என அனைத்து துறைகளிலும் தள்ளுபடி கிடைக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரெட்மீ நோட் கருவிக்காக காத்திருக்கும் சியோமி ரசிகர்களுக்கு இந்த விற்பனை 72 மணி நேரம் இயங்கவுள்ளது. எச்டிஎப்சி கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் உடனடி தள்ளுபடிகளும் இருக்கும்.

தி பிக் ப்ரீடம் சேல் 



ப்ளிப்கார்ட் ஆனது இந்த விற்பனையில் இடம்பெறும் அனைத்து சலுகைகள் சார்ந்த விவரங்களையும வெளியிடப்படவில்லை என்றாலும் கூட, தி பிக் ப்ரீடம் சேல் என்ற பெயரில் சில பிராண்ட்கள் சார்ந்த சலுகைகளை விளம்பரப்படுத்த தொடங்கியுள்ளது.

லெனோவா கே5 நோட் 



அதன்கீழ் ரூ.15,999 மற்றும் ரூ.16,999/- மதிப்பு கொண்ட மோட்டோ எம் மற்றும் மோட்டோ ஜி 5 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.12,999/- மற்றும் ரூ.14,999/-க்கு கிடைக்கும். இதேபோல், லெனோவா கே5 நோட் (ரூ 12,499) ரூ.9,999/-க்கும், கே6 பவர் (ரூ 9,999) கருவிக்கு ரூ.1,000/- தள்ளுபடியும் மற்றும் அதை ரூ.8,999/-க்கு வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

ஐபோன் 6 

கூகுள் பிக்சல் எக்ஸ்எல் கருவிகளை பொறுத்தமட்டில் ரூ. 67,000/- என்ற விலையில் இருந்து ரூ.48,999/-க்கு ப்ளிப்கார்ட் சலுகையில் சரியலாம். இந்த ப்ளிப்கார்ட் விற்பனையில் ஐபோன் 6 (32ஜிபி மாறுபாடு) கருவிக்கு விலைக்குறைப்பு கிடைக்கும்.

எக்ஸ்சேன்ஜ் 



இந்த விற்பனையில் ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்போன் விற்பனையானது மூன்று நாட்களுக்கும் வாங்க கிடைக்கும் மற்றும் வாங்குவோர் ரூ.1,000/- வரையிலாக பழைய பழைய ஸ்மார்ட்போனிற்கு எக்ஸ்சேன்ஜ் மதிப்பும் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டேப்ளெட் 



மொபைல் போன்களை தவிர, இந்த ப்ளிப்கார்ட் விற்பனையில் தொலைக்காட்சி, மடிக்கணினிகள், டேப்ளெட்கள் மற்றும் இதர மின்னணு சாதனங்களுக்கும் சலுகைகள் உண்டு. 32 அங்குல சோனி எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி ஆனது ரூ.32,900 முதல் ரூ.2_,999/-க்குள் கிடைக்கும். மேலும் வூ 45 அங்குல யூஎச்டி ஸ்மார்ட் டிவி ரூ.45,000/-க்கு பதிலாக ரூ.3_, 999/-க்கு கிடைக்கும்.

ஸ்மார்ட் டிவி 

இதேபோல், 43 அங்குல ஓனிடா முழு எல்ஈடி ஸ்மார்ட் டிவி ரூ.33,990 முதல் ரூ.2_,999/-க்குள் கிடைக்கும், வூ 39 அங்குல முழு எச்டி எல்ஈடி டி.வி ஆனது ரூ.26,500 முதல் ரூ. 2_,999/-க்குள் கிடைக்கும், மைக்ரோமேக்ஸ் 32 இன்ச் எச்டிஆர் எல்ஈடி டி.வி ஆனது ரூ.19,990/- முதல் ரூ.1_,999/-க்கு கிடைக்கும்.

மடிக்கணினிகள் 

மேலும் இன்டெல் கோர் ஐ3 மடிக்கணினிகள், கேனான் 1300டி டிஎஸ்எல்ஆர் கேமரா மற்றும் ஸ்கல்கேன்டி ஹெட்போன்கள் ஆகிய சாதனங்களுக்கும் இந்த விற்பனை விலை குறைப்புகளை காணும். மேலும் இன்டெல் கோர் ஐ3 மடிக்கணினிகள், கேனான் 1300டி டிஎஸ்எல்ஆர் கேமரா மற்றும் ஸ்கல்கேன்டி ஹெட்போன்கள் ஆகிய சாதனங்களுக்கும் இந்த விற்பனை விலை குறைப்புகளைக் காணும். குறிப்பாக லெனோவா யோகா 3 ஆண்ட்ராய்ட் டேப்ளெட் ஆனது ரூ. 1_,990/-க்கு கிடைக்கும் மற்றும் அதே நிறுவனத்தின் இன்க் டேன்க் பிரிண்டர்கள் ரூ.6,999/- என்ற விலைக்கு எக்ஸ்சேன்ஜ சலுகையில் கிடைக்கும்.

பவர் பேங்க் 



10000எம்ஏஎச் லெனோவா பவர் பேங்க் ஆனது ரூ.999/-க்கு விற்பனைக்கு வர ப்ளிப்கார்ட் ஸ்மார்ட்பை பவர்பேங்க் ரூ._49/-க்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ளிப்கார்ட்டின் மணி நேர ஒப்பந்தங்களின் கீழ் புதிய வருகை மற்றும் டிவி மற்றும் மொபைல்போன் பிரிவுகளில் பிரத்யேக அறிமுகங்கள் நிகழலாம்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...