இணையத் திருடர்களை ஏமாற்றி தகவல்களைப் பாதுகாக்கும் கணினித் தொழில்நுட்பம்

இரண்டாம் உலகப் போரின்போது, தங்கள் எதிரிகளைவிட தங்களிடம் அதிகமான படை பலமும் ஆயுத பலமும் இருப்பதாக அவர்களை ஏமாற்றி நம்பவைப்பதற்காக, எல்லாவிதமான தந்திர உத்திகளையும் நேச நாடுகள் கையாண்டன.

வட ஆப்பிரிக்க பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு படை, மேடையில் மந்திர வித்தைகளை அரங்கேற்றும் ஒரு கலைஞரிடம், அவர் எப்படி அவரது பார்வையாளர்களை ஏமாற்றுகிறார் என்று ஆலோசனை கேட்டு நிகழ்த்திய ஏமாற்று யுத்திகள் பல ஊக முக்கியத்துவம் வாய்ந்த போர்க்களங்களில் அவர்களுக்குப் பலனளித்தன.

இதில் மிகப்பெரிய வெற்றியைத் தந்த தந்திரம், ஆபரேஷன் ஃபோர்ட்டிட்யூடு (Operation Fortitude) துன்று அழைக்கப்பட்ட, நேச நாடுகளின் விமானங்கள் தரை இறங்கும் பொய்யான இடம் மற்றும் நேரத்தை நாஜிக்களை நம்ப வைத்ததுதான்.

அதே போன்ற தந்திரங்களையும் தவறான வழிகாட்டுதல்களையும் சிறிய அளவில் பின்பற்றி சில அமைப்புகள், பாதுகாப்பாக உள்ள கணினிகளின் தகவல்களைத் திருட முயலும், இணையதள ஊடுருவிகளின் முயற்சிகளை முறியடித்து வருகின்றன.

"உங்கள் எதிராளி உங்களின் உண்மை நிலை என்ன என்பதை அறியாமல் தடுப்பது பழங்கால போர் உத்திகளில் ஒன்று," என்று கூறும் ட்ரேப்க்ஸ் (Trapx) என்னும் இந்த ஊடுருவிகளை ஏமாற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நிறுவனத்தைச் சேர்ந்த ஓரி பாக், "இது இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகள் செய்ததைப்போலதான். அவர்கள் டாங்கிகள், விமானப் படைத்தளங்கள் என எல்லாவற்றையுமே பொய்யாக உருவாக்கினார்கள்," என்கிறார்.

அந்தப் போரின்போது உருவாக்கப்பட்ட பொய்யான ஆயுதங்களைப் போல, கணினி வலையமைப்புகளில் (network) பொருத்தப்படும் பொய்யான தரவுகள் உண்மையானவற்றைப் பலவே தோன்றும்.

"உண்மையான கணினி வலையமைப்பைப் போன்றே இருக்கும் ஒரு நிழல் வலையமைப்பை நாங்கள் உருவாக்குகிறோம்," என்கிறார் அவர்.

எந்த ஒரு தொழில்நுட்ப அமைப்பாலும் இணையதள தகவல் திருட்டுகளுக்கு எதிரான பாதுகாப்பை உருவாக்க முடியாது என்பதை உணர்ந்த பின்னரே இந்த ஏமாற்றும் தொழில்நுட்பம் (deception technology) என்று அறியப்படும் உத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

ஏதாவது ஒரு சூழலில், இணையத் தாக்குதலாளிகள் மெதுவாக தரவுகள் அடங்கியுள்ள கணினி வலையமைப்புகளுக்குள் நுழைந்து விடுகின்றனர்.

எனவே அவர்கள் ஊடுருவுவதை எச்சரிக்கையுடன் எதிர்பார்த்து, அவர்களால் பாதிப்பு ஏற்படுத்த முடியாத இலக்குகளை உருவாக்கி வைப்பது பலனளிக்கும் என்கிறார் பாக்.

"இணையதள ஊடுருவிகளுக்கு (hackers) , நாங்கள் உருவாக்கும் நிழல் வலையமைப்பு, உண்மையான தரவுகளைக் கொண்டுள்ள வலையமைப்பைவிட கவர்ச்சிகரமானதாக இருக்க வேண்டும்," என்று விரும்புகிறார் பாக்.

இனிய வலை

ஹனி பாட்ஸ் (honey pots) என்று அழைக்கப்படும் இணையதள தகவல் திருடர்களைக் கண்டறிய உதவும் ஒரு தொழில்நுட்பத்தின் மீதான ஆய்வுகளின்போதுதான் இந்த ஏமாற்றும் தொழில்நுட்பம் உருவானாதாக, இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இன்னொரு மென்பொருள் நிறுவனமான சிம்மெட்ரியாவைச் சேர்ந்த ஜோ ஸ்டீவர்ட். Read more....

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...