400 இந்திய மொழிகள் அழியும் ஆபத்து - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் தற்போது பேசப்பட்டு வரும் மொழிகளில் பாதிக்கும் மேற்பட்ட மொழிகள், அடுத்த 50 ஆண்டுகளில் அழிந்து விடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் தற்போது 780 மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக, தி பீப்புல்ஸ் லிங்குஸ்டிக் சர்வே ஆப் இந்தியா மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவில் தற்போது பேசப்பட்டு வரும் மொழிகளில் 400 மொழிகள் அடுத்த 50 ஆண்டுகளில் அழிந்துவிடும் அபாயம் உருவாகியுள்ளது எனவும் ஒவ்வொரு மொழி அழியும்போதும், அந்த கலாச்சாரமும் அழியக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

மலைவாழ் மக்களின் கல்வியறிவின்மை மற்றும் அவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாத நிலையால் அவர்களது மொழிகள் அழிய அதிக ஆபத்துகள் இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. கடந்த 5 தசாப்தங்களில் (50 ஆண்டுகளில்) 250 இந்திய மொழிகள் அழிந்துள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...