ஜியோ பீச்சரை சாமாளிக்க ஐடியாவின் ஸ்மார்ட் ஐடியா

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பிக் பாஸாக அசத்தி கொண்டிருக்கும் ஜியோ, விரைவில் மலிவு விலை போன்களிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. ஜியோவுக்கு போட்டியாக ஐடியா நிறுவனம் போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து மலிவு விலை போன்களை தயாரிக்க களமிறங்கியுள்ளது.

சில தினங்களுக்கு முன் 4ஜி ஜியோ ஸ்மார்ட் போன் ரூ1,500 டெபாசிட்டுடன் இலவசமாக வழங்கப்படும் என ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்தார். 

இந்நிலையில், 4ஜி ஜியோ ஸ்மார்ட் போன் போன்று டூயல் சிம் ஸ்லாட், 4ஜி வசதி, உள்ளிட்ட பல அம்சங்களுடன் ஐடியா புதிய மாடல் மொபைல் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. மொபைல் போன் தயாரிப்பு கட்டணத்தை குறைத்து, இதன் மூலம் செல்போனின் மொத்த விலையை கணிசமாக குறைக்க ஐடியா திட்டமிட்டுள்ளது. இவ்வாறு தயாராகும் ஐடியா மொபைல் போனின் விலை ரூ.2500 முதல் துவங்கும் என்று ஐடியா நிறுவன தலைவர் ஹிமான்ஷூ கபானியா தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஜியோபோனிற்கு போட்டியாக மைக்ரோமேக்ஸ் நிறுவனமும், லாவா நிறுவனமும் குறைந்த விலையில் 4ஜி பீச்சர் போன் ஒன்றை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...