குறைந்த விலையில் ஜியோமி எம்.ஐ.5 அறிமுகம்

குறைந்த விலையில் பல்வேறு வசதிகளை பெற்ற ஜியோமி எம்.ஐ 5X ஸ்மார்ட்போன் MIUI 9 இயங்குதளத்துடன் இன்று விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தியில் முன்னணியில் திகழும் சீன நிறுவனமான ஜியோமி புதிய ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்துள்ளது.

டூயல் கேமரா, 4ஜிபி ரேம் போன்ற வசதிகளுடன் கூடிய மிக சிறப்பான ஜியோமி எம்ஐ 5X மொபைல் புதிய  MIUI 9 கஸ்டம் இயங்குதளத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கருப்பு, கோல்டு மற்றும் வெள்ளை மூன்று நிறங்களுடன் யூனிமெட்டல் பாடியுடன் கூடிய அம்சத்தை பெற்றுள்ளது.

வளைந்த கிளாஸ் கொண்ட பாதுகாப்பு அம்சத்துடன் கூடிய எம்ஐ 5எக்ஸ் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு நௌகட் 7.0 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு கஸ்டமைஸ் செய்யப்பட்ட புதிய  MIUI 9 கஸ்டம் இயங்குதளத்துடன் 2GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 SoC, 4 ஜிபி ரேம், 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ், 12 மெகாபிக்சல் கேமரா, 3,080mAh பேட்டரி திறன் உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த ஃபோனின் விலை இந்திய மதிப்பில் 14,200 ரூபாய் ஆகும்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...