ஸ்மார்ட்போன் தயாரிப்பில் களமிறங்கும் ஃபேஸ்புக்

2004 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஃபேஸ்புக் தற்போது சுமார் 200 கோடி பயனாளர்களை கவர்ந்துள்ளது.  à®’வ்வொரு நாளும் புதுப்புது வசதிகளையும் அப்டேட் செய்து வருகிறது. அந்த வகையில் ஃபேஸ்புக் தற்போது ஸ்மார்ட்போன் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது.

மாடுலர் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ள தகவல்களின்படி மாடுலர் ஸ்மார்ட்போன் தயாரிக்க காப்புரிமையை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே, ஸ்பீக்கர், ஜிபிஎஸ், மைக்ரோபோன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. 

இந்த புதிய வகை கருவியானது லெகோ ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளிவாகி உள்ளது. இதில் உள்ள முக்கிய சிறப்பம்சங்கள் மெயின் சேசிஸ், 3டி பிரின்டிங் மூலம் செயல்படக் கூடிய மாடுல்கள் இதில் இடம்பெற்றுள்ளது. பேட்டரித் திறன், கேமரா, ஸ்பீக்கர்கள் போன்ற அம்சங்கள் சாதாராண ஸ்மார்ட்போன்களை விட சிறப்பாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவில் இந்த போன்கள் சந்தையில் களமிறங்கும் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...