வளரக்கூடிய பாம்பு ரோபோ உருவாக்கம்! (வீடியோ)

அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் பாம்பு ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

உயிரினங்களை பார்த்து ரோபோக்களை வடிவமைத்த விஞ்ஞானிகள் முதன் முதலாக மனிதனை மாடலாக கொண்டு வடிவமைத்தனர். அதன் பின்னர் சில வகையான மிருகங்களை அடிப்படையாகக் கொண்ட ரோபோக்களை உருவாக்கினர். 

தற்போது பாம்பினை அடிப்படையாகக் கொண்ட ரோபோ ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ வளரக்கூடியதாக இருப்பதுடன் வளைவு நெளிவுடன் உண்மையான பாம்பினை போன்று தோற்றமளிக்கும் அளவிற்கு மிக தத்ரூபமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. 100 கிலோ எடையுடைய இந்த இந்த பாம்பு ரோபோ, பேரழிவு அல்லது அவசர நேரத்தில் அதிகம் பயன்படும் என ஆய்வாளார்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, விபத்தின் போது ஒருவர் அறையினுள் மாட்டிகொண்டால் அவருக்கு சிறு குழாய் வழியாக தண்ணீர் கொடுக்க இந்த பாம்பு ரோபோ பயன்படும் எனவும் கூறப்படுகிறது. 

அமெரிக்க விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோ எதிர்காலத்தில் மனித உயிர்களை காப்பாற்றுவதற்கு பயன்படுத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  à®®à¯‡à®²à¯à®®à¯ இந்த பாம்பு ரோபோ மணிக்கு 35 கிலோமீட்டர்கள் வேகத்தில் பயணம் செய்யக்கூடியது என்றும், காற்றின் மூலம் அழுத்தம் கொடுப்பதன் மூலம் ரோபோ வளரும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...