ரூ.153-க்கு அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால்: முகேஷ் அம்பானி

ரூ.153-க்கு அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் வசதியும், ரூ.309-க்கு ஜியோ கேபிள் சேவையும் அளிக்கப்படும் என முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

மும்பையில்‌ ரிலையன்ஸ் நிறுவனத்தின் 40-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அவர், “4ஜி ஜியோ செல்ஃபோன் அறிவிப்பால், ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் அதிரடியாக உயர்ந்துள்ளன. மும்பை பங்குச்சந்தையில் ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரிலையன்ஸின் பங்குகள் அதிகரித்துள்ளன” என்று கூறினார். மேலும், கடந்த 1977 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் ரூ.7 கோடி வருமானத்தை ஈட்டியது என்றும், மிகச்சில நிறுவனங்களே ரிலையன்ஸ் போன்று வளர்ச்சி அடைந்துள்ளன என்றும் அவர் கூறினார். ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது 4,700 மடங்கு வருவாயைப் பெருக்கியுள்ளது என்றும் முகேஷ் அம்பானி கூறினார்.

வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஜியோ ஃபோன்கள் 100 கோடி பேருக்கு இலவசமாக வழங்கப்படும் என கூறிய முகேஷ் அம்பானி, மாதந்தோறும் ரூ.153 செலுத்தினால் ஃபோன் கால்கள், எஸ்எம்ஸ், இணையவசதி இலவசம் என்றும், ரூ.309 மாதக்கட்டணமாக செலுத்தினால் ஜியோ ஃபோன் கேபிள் டிவியும் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்று கூறினார்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...