கொசுக்களை வைத்தே கொசுக்களை அழிக்க கூகுளின் புதிய திட்டம்

கூகுளின் துணை நிறுவனமான ஆல்ஃபாபேட்ஸ் லைஃப் சயின்ஸ் வெரிலி, தனது உயிர் அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வகத்தில் ஒவ்வொரு வாரமும் சுமார் ஒரு மில்லியன் கொசுக்களை உருவாக்க உள்ளது.

உலகில் உள்ள பல நோய்களுக்கு முக்கிய காரணம் கொசு. அளவில் சிறிதாக இருந்தாலும் நோய்களை பரப்புவதில் கொசுவுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த மாபெரும் அந்நிய சக்தியான கொசுவை உயிர் அறிவியல் தொழில் நுட்பவியல் மூலம் அழிக்கும் முயற்சியில் கூகுள் இறங்கியுள்ளது.

உயிர் அறிவியல் தொழில் நுட்ப துறையான (Verily Life Science)  à®µà¯†à®°à®¿à®²à®¿ உதவியுடன் தற்போது 20 மில்லியன் ஆண் கொசுக்களை உற்பத்தி செய்து பறக்கவிடப் போகின்றது கூகுள் நிறுவனம். கொசுக்களை அதிகபடுத்துவதால் நன்மை ஏற்படுமா என சந்தேகம் ஏற்படுவதுண்டு. கொசுவை உருவாக்குவதே கொசுக்களை அழிக்கதான் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது வால்பாஷியா பாக்டீரியா மூலம் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் ஆண் கொசுக்களை உருவாக்கி அதை வெளியே அனுப்ப உள்ளனர். இந்த ஆண் கொசுக்களுடன் சேரும் பெண் கொசுக்கள் போடும் முட்டைகள், புதிய கொசுக்களை உருவாக்கும் தன்மை அற்றது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஃபிரஸ்னோவில் உள்ள ஆய்வகத்தில் இந்த கொசுக்கள் உருவாக்கப்படுகின்றன. இது, அமெரிக்காவின் மிகப்பெரிய சோதனையாக கருதப்படுகிறது. இந்த சோதனை குறித்து எம்ஐடி டெக்னாலஜி மூத்த பொறியாளர் லினஸ் அப்ஸன் கூறுகையில், “உலக மக்களுக்கு உண்மையாக உதவ விரும்பினால் இதுபோன்று நிறைய கொசுக்களை நாங்கள் உற்பத்தி செய்ய வேண்டும். அதனை எந்தப் பகுதிக்கு அனுப்ப வேண்டும் என திட்டமிட்டு அங்கு செலுத்துவோம். இதற்கு மிகக்குறைந்த செலவே ஆகிறது. ஆஸ்திரேலியாவிலும் இந்த சோதனையை இந்த ஆண்டு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த சோதனை நடத்துவதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (EPA) ஒப்புதல் வழங்கியுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட இந்த மலட்டு தன்மையுள்ள கொசுக்கள் மற்ற உயிரினங்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்காது என உறுதியளிக்கிறோம்” என்று கூறினார்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...