வியாழன் கோளின் அறியப்படாத ரகசியங்கள்: ஜூனோ அனுப்பிய துல்லிய புகைப்படங்கள்

அண்ட வெளியில் உள்ள பல கோள்களை குறித்து ஆராய்ந்தறியும் முயற்சிகள் தொன்று தொட்டு நடந்து வருகின்றன. வேறு கோள்களில் மனிதக் குடியேற்றங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வரும் நாசா விண்வெளி மையம் சூரியக்குடும்பத்தின் பெருங்கோளான வியாழன் குறித்த ஆராய்ச்சியில் அடுத்தபடியை எட்டியிருக்கிறது.

வியாழன் கோளுக்கு அமெரிக்கா அனுப்பிய ஜூனோ விண்கலம், மிகத் துல்லியமான புதிய புகைப்படங்களை அனுப்பியிருக்கிறது. வியாழன் கோளின் மிகப் பெரிய செந்நிறப் பகுதி அருகே பறந்து சென்ற ஜூனோ விண்கலம், இதுவரை எடுக்கப்படாத பல கோணங்களிலும், வண்ணங்களிலும் புகைப்படங்களை அனுப்பியிருக்கிறது. வியாழனுக்கு சுமார் 3,500 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. வியாழன் கோளில் சுமார் 16 ஆயிரம் கிலோ மீட்டர் விட்டம் கொண்ட செந்நிறப் பகுதி, எப்படி ஏற்பட்டது என்பது குறித்த புதிரை விடுவிப்பதில், இந்தப் புகைப்படங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கருதப்படுகிறது.

சூரியக் குடும்பத்தின் பெருங்கோள் வியாழன்:

வியாழனுக்குச் சென்ற ஜுனோ சூரியக் குடும்பத்தின் வளியரக்கன் எனப் பெயர் பெற்ற கோள் வியாழன். புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய கோள்களைத் தாண்டி 5-வதாக அமைந்திருக்கும் வியாழன், ஒரு வாயுக் கோளம். இங்கு ஒரு நாள் என்பது 10 மணிக்கும் குறைவான நேரமே. 9 மணி 50 நிமிடத்தில் இந்தக் கோள் தன்னைத்தானே சுற்றிவிடுகிறது. சந்திரன், வெள்ளிக்கு அடுத்தபடியாக சூரிய ஒளியை அதிகமாகப் பிரதிபலிக்கும் கோளும் இதுதான். பூமியைவிட இரண்டரை மடங்கு ஈர்ப்புவிசை கொண்ட வியாழன், சூரியக் குடும்பத்தில் உள்ள பிற கோள்களின் ஒட்டுமொத்த நிறையைக் காட்டிலும் அதிகமான நிறையைக் கொண்டிருக்கிறது. Read more....

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...