6,200கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் "ஹைபர்சோனிக் விமானம்"

மணிக்கு 6ஆயிரத்து 200 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் பயணிகள் விமானத்தை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றியடைந்துள்ளனர். 

இங்கிலாந்தின் மான்செஸ்டர் மற்றும் சீனாவின் மத்திய தெற்கு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து இந்த புதிய ரக விமானத்தை உருவாக்கியுள்ளனர். அதிவேகமாக செல்லக்கூடிய இந்த விமானத்தின் வெளிப்பாகம் செராமிக் மற்றும் கடினமான ரசாயன கலவைகளால் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை இந்த முறையில் எந்த விமானமும் உருவாக்கப்படவில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகத்தின் அதிவேகமான விமானமாக கருதப்படும் MiG-25-ன் அதிகப்படியான வேகம் 3ஆயிரத்து 200ரக உள்ள நிலையில், பயணிகள் விமானத்தை இதைவிட இருமடங்கு வேகத்தில் செல்லும் அளவிற்கு இந்த புதிய ரகவிமான வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் இந்த விமானத்தை பயணிகள் சேவைக்கு கொண்டு வரும் முயற்சியிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விமானம் விண்வெளியிலும் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், விமான போக்குவரத்து அடுத்த கட்டத்தை விரைவில் எட்டும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாசாவின் நிதியுதவியுடன் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், 3 ஆயிரம் டிகிரி வரை இந்த விமானம் தட்பவெட்பத்தை தாங்கும் என்பதால் விரைவில் நிலவு வரை செல்லக்கூடிய அளவுக்கு விமானம் தரம் உயர்த்தப்படும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த விமானத்தின் மூலமாக லண்டனிலிருந்து நியூயார்க் நகரத்திற்கு 2 மணி நேரத்திற்குள் செல்ல முடியும் எனக் கூறியுள்ள விஞ்ஞானிகள், இந்த விமானத்திற்கு "ஹைபர்சோனிக் விமானம்" எனவும் பெயரிட்டுள்ளனர்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...