ஃபேஸ்புக் கொண்டு வருகிறது புதிய வீடியோ சாட் ஆப்

சமூக வலைத் தளங்களில் பிரபலமான ஃபேஸ்புக், இளைஞர்களை கவரும் வகையில் தினம்தினம் புதிதாக பல சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

ஃபேஸ்புக் மெசென்ஜரில், ஏற்கனவே வீடியோ சாட் வசதி உள்ளது. இந்நிலையில் தற்போது க்ரூப் வீடியோ சாட் வசதியை அளிக்கும் பான் பயர் என்ற ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதே போன்ற வீடியோ சாட் வசதியை அளிக்கும் ஹவுஸ் பார்ட்டி என்ற செயலி இரண்டு வருடங்களுக்கு முன்பு மிக பிரபலமாக விளங்கியது. இளைஞர்கள் மத்தியில் மிகவும் பயன்படுத்தப்பட்ட அந்த ஆப்-பை சில காரணங்களால் நீக்கிவிட்டனர். தற்போது ஹவுஸ் பார்ட்டி செயல்பாட்டில் இல்லை. 

இந்நிலையில், இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்ற ஹவுஸ் பார்ட்டி ஆப் போல ஃபேஸ்புக் பான் பயர் என்ற பெயரில் புதிதாக ஒரு ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஃபேஸ்புக்கில் உள்ள நண்பர்களுடன் லைவ் வீடியோ சாட்டிங் செய்யலாம். இதில் உள்ள முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், எத்தனை பேருடன் வேண்டுமானாலும் சாட்டிங் செய்ய முடியும். 

பான் பயர் ஆப் மூலம் நம்முடைய ஃபேஸ்புக் நண்பர்களுடன் வீடியோ சாட்டிங் செய்யும் போது அவர்களது நண்பர்களுக்கு நோட்டிஃபிகேசன் செல்லும். அவர்களில் யாரேனும் இந்த பான் பயரில் இணைய விரும்பினால் அவர்களும் நண்பர்களுடன் இணைந்து கொள்ளலாம். இதுபோன்று அவருடைய நண்பர்கள் லிஸ்ட்டில் உள்ளவர்களுக்கும் நோட்டிஃபிகேசன் செல்லும். இதுபோன்று பல நண்பர்களுடன் இணைந்து வீடியோ சாட் செய்ய முடியும். 

இதேபோன்று டாக் எனும் மற்றொரு வீடியோ சாட் செயலியையும் ஃபேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ளது. அதை பற்றிய தகவல்களை ரகசியமாகவே வைத்துள்ளது  à®ƒà®ªà¯‡à®¸à¯à®ªà¯à®•் நிறுவனம். 

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...