கடல்தாண்டி அசுர வேகத்தில் வரும் இண்டர்நெட்.. இது ஜியோ ஸ்டைல்!

உலகின் மிகப்பெரிய கடல்வழி இணையச் சேவையை ஜியோ அறிமுகம் செய்ய உள்ளது.

இது ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் 21 கேபிள்களை தரையிறக்கி, 3 கண்டங்களை இணைக்கும் வகையில் மிகப்பெரிய கடல்வழி இணையச் சேவையை ஜியோ அறிமுகம் செய்ய உள்ளது. கடந்த ஆண்டு அதிரடி சலுகைகளுடன் களமிறங்கி கலக்கி கொண்டிருக்கும் ஜியோ தொலைத் தொடர்பு சேவை, புதிது புதிதாக பல இலவச சேவைகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளார்களை தன்வசம் ஈர்த்தது.

இந்நிலையில், தற்போது இணையச் சேவைக்காக கடல்வழி கேபிள்களை அமைக்க ஜியோ முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 40 டெரா பிட்ஸ் அலைவரிசையை பகிர முடியும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சேவை ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய 3 கண்டங்களை இணைக்கிறது.

இது 25,000 கி.மீ. தொலைவில் ஏஏஇ-1 என்ற கேபிள் கடலுக்கடியில் செலுத்தப்படவுள்ளது. அனைத்து உலகளாவிய சந்தைகளை நேரடியாக அணுகுவதற்கு பயன்படுவதுடன், மற்ற கேபிள் சாதனங்கள், ஃபைபர் நெட்வொர்க்களுடனும் ஏஏஇ-1 சுலபமாக இணைகிறது. இந்த கேபிள்கள் பிரான்சின் மர்செய்லீயில் இருந்து, ஹாங்காங் வரை தொடர்கிறது. இதற்காக ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசியாவில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் ஜியோ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த கேபிள் மூலம் 100 ஜிபிபிஎஸ் அதிவேக இணையச் சேவையை தொடர்ந்து பெறலாம் என்றும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அதிவேக சேவையைக் கொண்டு, அனைத்துவிதமான தகவல் தொடர்புகளையும் அசுர வேகத்தில் பெறலாம்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...