செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக குழந்தைக் கடத்தலா?: நாசா விளக்கம்

செவ்வாய் கிரகத்திற்கு ஆராய்ச்சிக்காக குழந்தைகளை கடத்தவில்லை என்றும், அங்கு மனிதர்கள் யாரும் இல்லை என்றும் நாசா தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உள்ள தற்போதைய நிலைமை மனிதர்களுக்கு ஏற்றதாக இல்லை. மேலும், இந்த சிவப்புக்கோள் பெரும்பாலும் கார்பன்-டை-ஆக்சைடால் சூழப்பட்டுள்ளதுடன், சராசரி வெப்பநிலை -81 டிகிரி ஆக உள்ளது. 

இந்த கிரகத்தில் குழந்தைகள் கடத்தி அனுப்பப்படுகிறார் என்றும், அவர்கள் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும் விஞ்ஞானி ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

ஆனால், பூமியில் இருந்து 33.9 மில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ள செவ்வாயின் தட்பவெப்பநிலையில் மனிதர்கள் வாழ முடியாது. எனவே செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் பற்றிய வதந்திகள் பொய்யானவை என செவ்வாய் கிரக ஆராய்ச்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் இல்லை. செவ்வாய் கிரகத்தில் ஒரு சில ஆராய்ச்சிகளுக்காக ரோவர்கள் தான் உள்ளன என நாசா தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சூழல் உள்ளது என்றும் ஒரு கருத்து நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...