ரிலையன்ஸ் ஆர் காமின் புதிய டேட்டா சலுகை

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஆர்காம் நிறுவனம் தங்களுடைய ப்ரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 193 ரூபாய் கட்டணத்தில் 28 நாட்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.

அனில் அம்பானி நிர்வகிக்கும் ரிலையன்ஸ் குழுமத்தின் ஆர் காம் (Rcom) தொலைதொடர்பு நிறுவனம், போட்டியாளர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் புதிய டேட்டா ப்ளானை அறிவித்துள்ளது. ரூபாய் 193 கட்டணத்தில் தினமும் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது இந்த ப்ளான். இந்த பிளானில் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் அறிவிக்கப்படவில்லை.

சில நாட்களுக்கு முன்பு, ஆர் காம் தனது போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 239 ப்ளானில் 6 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர் அழைப்புகள், ப்ளான் 333 கீழ் 30 ஜிபி டேட்டா மற்றும் 1000 நிமிட இலவச அழைப்புகளும் வழங்குவதாக அறிவித்திருந்தது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...