நாளை மறுநாள் விண்ணில் பாய்கிறது ஜிசாட்-17

தொலைதொடர்புக்கான செயற்கைக்கோள் ஜிசாட்-17, வரும் வியாழக்கிழமை விண்ணில் பாயும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், 8 முதல் 10 பிஎஸ்எல்வி ராக்கெட்களையும், தலா 2 ஜிஎஸ்எல்வி மார்க்-3, மார்க்-2 ராக்கெட்டுகளையும் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன்படி, சமீப நாள்களாக தொடர்ச்சியாக செயற்கைக்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்திவருகிறது. தற்போது, தொலைத்தொடர்பு மேம்பாட்டுக்காக ஜிசாட்-17 என்ற செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளது.

அதிக எடைகொண்ட இந்த ஜிசாட்-17 செயற்கைக்கோளை அனுப்புவதற்கான மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்பு, இன்னும் இஸ்ரோ ஏவுதளத்துக்கு கொண்டுவரப்படவில்லை. இதனால், ஃப்ரெஞ்ச் கயானாவிலிருந்து ஜிசாட்-17 செலுத்தப்படுகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 5,425 கிலோ எடை கொண்ட ஜிசாட்-17, ஏரியன் ராக்கெட் மூலம் 29-ம் தேதி, அதாவது நாளை மறுநாள் அதிகாலை 2 மணி அளவில் விண்ணில் பாய்கிறது. 

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...