சூரிய குடும்பத்தில் இன்னொரு கோள் 'பிளானட் 10'

சூரியக் குடும்பத்தில் செவ்வாய் கோள் போன்ற விண்பொருளை அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சூரியக்குடும்பத்தில் இதுவரை ஒன்பது கோள்கள் இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் 2006-ல் புளூட்டோவுக்கு கோள்களுக்கான தகுதி இல்லை எனக்கூறி கோள்களின் பட்டியலில் இருந்து அது நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சூரிய குடும்பத்தில் வேறு கோள்கள் உள்ளனவா என்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருந்தது. 

இந் நிலையில் செவ்வாய் கோள் போன்ற விண்பொருள் ஒன்று சூரியக்குடும்பத்தின் எல்லையில் இருப்பதை விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர். அந்த விண்பொருள் புளூட்டோவுக்கு மிக அருகில் இருப்பதாகவும், அதன் காந்த விசையை பொருத்தே அது கோளா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்த முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

மற்ற கோள்களை போன்று சூரியனைச் சுற்றுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விஞ்ஞானிகளின் கருத்துப்படி,செவ்வாய் கிரகத்தை விட பெரிதாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

அண்மையில். சூரிய குடும்பத்துக்கு வெளியே பூமியைப் போல் மேலும் 10 கோள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசாவின் கெப்ளர் குழு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...