செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டன...

பி.எஸ்.எல்.வி-சி 38 ராக்கெட்டில் அனுப்பட்ட அனைத்து செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன என இஸ்ரோ அமைப்பு தெரிவித்துள்ளது.

பூமியை கண்காணிக்கும் செயற்கைகோள்களுடன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சரியாக காலை 9 மணி 29 நிமிடங்களுக்கு ராக்கெட் ஏவப்பட்டது. இயற்கை வளங்களை துல்லியமாக படம் எடுத்து அனுப்பும் திறன் வாய்ந்த 712 கிலோ எடை கொண்ட கார்ட்டோசாட்-2 இ செயற்கைகோள், இந்த ராக்கெட்டில் அனுப்பப்பட்டு வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. மேலும் 30 நானோ செயற்கைகோள்களும் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அதில், 29 செயற்கைகோள்கள் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்தவை. ஒரு செயற்கைகோள், கன்னியாகுமரியைச் சேர்ந்த நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கியது. இந்த செயற்கைகோள் பயிர் கண்காணிப்பு மற்றும் பேரிடர் காலங்களில் உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கார்ட்டோசாட் வகை செயற்கைக்கோள்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுபவை ஆகும். கார்ட்டோசாட் 2-இ செயற்கைக்கோள் மூலம் எல்லையில் பயங்கரவாதிகள் நடமாட்டத்தைக்கூட மூலம் துல்லியமாக கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...