விரைவில் வர இருக்கும் ஸ்மார்ட்போன்கள்..

ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு உள்ள முக்கிய பிரச்னைகளில் ஒன்று, போன் ஹேங் ஆவது. போன் ஹேங் ஆவதற்கு முக்கியமான காரணங்களின் ஒன்று, ரேம். ரேம் வசதி அதிகமானதாக இருக்கும்பட்சத்தில் போன் ஹேங்காகும் பிரச்னை இருக்காது. 8 ஜிபி ரேம் வசதியுடன் இந்தியாவில் விரைவில் வெளிவர இருக்கும் ஸ்மாட்போன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

ஒன்பிளஸ் 5

பலராலும் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ்5 ஸ்மார்ட்போன் உலகமெங்கும் ஜூன் 20-ஆம் தேதி வெளியாகிறது. இந்தியாவில் ஜூன் 22-ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. கேமராவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியாக உள்ள இந்த போனில் 8ஜிபி ரேம் வசதி உள்ளது. இருப்பினும் கேமராவின் எம்பி திறன் வெளியாகவில்லை. 4000 மில்லி ஆம்பியன் திறன் கொண்ட பேட்டரி இந்த போனில் இருக்கிறது. இதனால் சார்ஜ் நிற்பதில் எந்த பிரச்னையும் இருக்காது.

ஜியோமி மி 7




ஜியோமி நிறுவனத்தின் ஜியோமி மி7 ஸ்மார்ட்போன் 21 எம்.பி முன்பக்க கேமராவுடன் 8 ஜிபி அல்லது 6ஜிபி ரேம் வசதியுடன் வெளிவர இருக்கிறது. எப்போது இந்த போன் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும் இந்த மாதம் முடிவதற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




ஹெச்டிசி 11

ஹெச்டிசி 11 ஸ்மார்ட்போன் நாளை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் 8 ஜிபி ரேம் வசதியுடன் 256 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியும் உள்ளது. இதின் பேட்டரி திறன் 3000 முதல் 3700 மில்லி ஆம்பியன் திறன் கொண்டதாக இருக்கும். மற்ற விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

சாம்சங் கேலக்சி நோட் 8

மிகவும் எதிர்பார்க்கப்படும் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாதம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி இப்போன் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8 ப்ளஸ் போன்றே இருமாடல்களில் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 8 டிஸ்பிளே, 6.13 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ரியர் கேமரா 13 மெகா பிக்சல் கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்புற கேமரா 12மெகா பிக்சல் கொண்டுள்ளது. 6 ஜிபி ரேம் வசதியுடன் 64 ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 256 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...