200 யானைகளின் எடை கொண்ட ராக்கெட்டை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ

நாற்பத்து மூன்று மீட்டர் உயரமுள்ள ஜிஎஸ்எல்வி எம்கே 3 - டி1 (GSLV MkIII-D1) ராக்கெட் இன்று மாலை 5.28 மணிக்கு முன்னதாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

`ராட்சத ராக்கெட்` என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் இந்த ராக்கெட், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிலிருந்து செலுத்தப்படவுள்ள சக்திவாய்ந்த ராக்கெட்டாகும். மேலும் இதன் எடை முழுவதுமாக வளர்ந்த 200 யானைகளின் எடையாகும்.

ஜிஎஸ் எல் வி எம் கே3-டி1 புவியோடு இணைந்த சுற்று வட்டப்பாதையில் 4000கிகி எடை கொண்ட செயற்கைக்கோளையும், மேலும் சாதாரணமான புவி சுற்றுப் பாதையின் சற்று கீழ் உள்ள பாதையில் 10,000கிகி எடையுள்ள செயற்கைக்கோளையும் செலுத்தும் வல்லமை கொண்டதாகும்.

திரவ ஆக்ஸிஜன் மற்றும் திரவ ஹைட்ரோஜன் ஆகியவற்றை எரிப்பொருளாக பயன்படுத்தி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதீத குறைவான எரிபொருளில் இயங்கும் எஞ்சினால் இந்த ராக்கெட் இயங்கவுள்ளது.

மேலும் இந்த ராக்கெட் 3,136 கிலோகிராம் எடை கொண்ட ஜி-சாட்-19 தொடர்பு செயற்கைக்கோளை சுமந்துச் சென்று, பூமிக்கு 36,000 தூரத்தில் செலுத்தவுள்ளது.

ஜிசாட் - 19 செயற்கைக்கோள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிலிருந்து ஏவப்படும் மிகப்பெரிய செயற்கைக்கோள் ஆகும்.

முதல்முறையாக ஜி-சாட் 19 செயற்கைக்கோள், உள்நாட்டில் தயாரிக்கப்ப்ட்ட லித்தியத்தால் ஆனா பேட்டரிகளால் இயங்கப்படவுள்ளது

உயர் பாண்ட்விட்த்தை ( கற்றை அகலம்) கொண்ட சமிக்ஞை கடத்தியை தவிர்த்து, மின்னூட்டத் துகள்களின் இயல்பு மற்றும் செயற்க்கைக்கோள் மற்றும் அதன் மின்னணு பாகங்களில் விண்வெளி கதிர்வீச்சின் தாக்கம் குறித்து கண்காணிக்கவும், அறிந்து கொள்ளவும் புவியின் பகுதிகளில் கதிரியக்கம் மற்றும் ஒளியை கணக்கிடும் கருவியை செலுத்தவுள்ளது.

சிறிய வடிவ வெப்ப குழாய்கள், ஃபைபர் ஆப்டிக் கைரோஸ்கோப், மைக்ரோ எலக்ட்ரோ மெகானிகல் சிஸ்டம் ஆசிலிரோமீட்டர் மற்றும் உயர் பாண்ட்விட்த்தை பயன்படுத்தும் சமிக்ஞை கடத்தி என ஜிசாட்-19 செயற்கைக்கோளில் சில மேம்பட்ட அம்சங்களும் உள்ளன.

இந்த முயற்சி வெற்றியடைந்துவிட்டால், புவியின் சுற்றுவட்டப் பாதையில் 4 டன் எடைகொண்ட செயற்கைக்கோள்களை நமது நாட்டிலிருந்து செலுத்த முடியும் என்ற நிலையை இது உருவாக்கும் என இந்த இந்த முயற்சியில் முக்கிய நபராக திகழும் இஸ்ரோ தலைவர் டாக்டர் கஸ்தூரிரங்கன் தெரிவித்துள்ளார்.

இன்று வரை, இந்தியா, 2,300 கிகி எடைக்கு அதிகமான தொலைதொடர்பு செயற்கைக்கோள்களை செலுத்த வெளிநாடுகளில் தயாரித்த ராக்கெட்டுகளை சார்ந்து இருக்க வேண்டிய நிலை இருந்தது.

640 டன் எடை கொண்ட ராக்கெட்டை செலுத்துவது இஸ்ரோவின் சாதனைகளில் மேலும் ஒன்றாகும்.

இந்த ராக்கெட் 104 செயற்கைக்கோள்களை ஒரே சமயத்தில் செலுத்தி, ஜூன் 2014 ஆம் ஆண்டு ஒரே முறையில் 39 செயற்கைக்கோள்களை செலுத்திய ரஷியாவின் சாதனையை முறியடிக்கவுள்ளது.

15 வருடங்களாக உருவாக்கப்பட்ட இந்த ராக்கெட் எதிர்காலத்தில், விண்வெளிக்கு இந்தியா மனிதர்களை அனுப்ப உதவக்கூடும்; மேலும் இதற்காக அரசாங்கத்திடமிருந்து 15,000 கோடி ரூபாயை இஸ்ரோ கோரியுள்ளது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...