பல ஆண்களின் உயிரைக் காப்பாற்ற விரைப் புற்றுநோய் சிகிச்சைக்கு புதிய மருந்து

ப்ரோஸ்டேட் எனப்படும் விரைப்புற்று நோயால் பாதிக்கப்படும் பல ஆண்களின் உயிரிழப்பைத் தடுத்து, மேலும் பல ஆண்டுகள் வாழ வழி செய்யும் வகையில், புதிய மருந்து ஒன்று சிறந்த பலனைத் தருவது ஆய்வில் தெரியவந்துள்ளது

ப்ரோஸ்டேட் புற்றுநோய் சிகிச்சைக்காக வழங்கப்பட்ட மருந்து ஒன்று, முன்னர் எண்ணியதை விட அதிக உயிர்களை காப்பாற்றியிருப்பது ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

நீண்டகால ஹார்மோன் சிகிச்சை தொடங்கவிருந்த ப்ரோஸ்டேட் புற்றுநோயாளிகளுக்கு கூடுதல் சிகிச்சையாக வழங்கப்பட்ட அபிரட்டெரோன் மருந்தை சோதனை செய்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

'நியூ இங்கிலாந்து ஜெர்னல் ஆப் மெடிசின்' சஞ்சிகையில் வெளியான முடிவுகள்படி, அபிரட்டெரோன் அதிக உயிர்களை காப்பாற்ற உதவியுள்ளது.

"ப்ரோஸ்டேட் புற்றுநோய் மருந்து சோதனையில் நான் கண்டுள்ள மிகவும் தலைசிறந்த முடிவுகள் இவை. தொழில்முறை வாழ்க்கையில் ஒரேயொரு முறை கிடைத்திருக்கும் சிறந்த உணர்வு" என்று இந்த ஆய்வை வழிநடத்திய பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் நிக்கோலாஸ் ஜேம்ஸ் தெரிவித்திருக்கிறார்.

"வயதுவந்தோரில் புற்றுநோய்க்கான மருந்து சோதனையில், கணிசமான அளவு மரணங்களை குறைந்திருக்கும் மருந்துகளில் ஒன்று இது" என்று அவர் தெரிவிக்கிறார்.

ஸைதிகா என்றும் அறியப்படும் அபிரட்டெரோன், புற்றுநோய் செல்களை கொன்றுவிடுகின்ற கீமோதெரபி போல் அல்லாமல், அதிக டெஸ்டோஸ்டிரோன் ப்ரோஸ்டேட் சுரப்பியை சென்றடைவதை தடுத்து, கட்டியின் வளர்ச்சியை இது கட்டுப்படுத்துகிறது.

இந்த மருந்து சோதனை சுமார் இரண்டாயிரம் நோயாளிகளிடம் நடத்தப்பட்டது.

பாதி ஆண்களுக்கு ஹார்மோன் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறருக்கு ஹார்மோன் மற்றும் அபிரட்டெரோன் சிகிச்சை வழங்கப்பட்டது.-- மேலும்  à®ªà®Ÿà®¿à®•்க 

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...