செவ்வாய் கிரகத்தில் உயிர்கள்... நாசா விண்கலம் கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரத்தை நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் கண்டறிந்துள்ளது. 

சிவப்பு கிரகம் என்றழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தினை ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கியூரியாசிட்டி ரோவர் விண்கலத்தினை அனுப்பியது. அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள பாறைகளில் நீரோட்டம் இருந்ததற்காக புகைப்பட சான்றுகளை கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பியுள்ளது. 

இந்த புகைப்படங்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் சமீபகாலம் வரை உயிர்கள் வாழ்ந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். நீரோட்டம் இருந்த பாதைகளில் சிலிகா படிமம் படிந்திருப்பதை உறுதி செய்துள்ள விஞ்ஞானிகள், இது செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்திருப்பதற்காக சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி நீர் இருக்கிறதா என்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...