சூரியனை நெருங்கும் நாசா

உலகிலேயே முதல்முறையாக சூரியனுக்கு மிக அருகில் விண்கலத்தை செலுத்தும் திட்டத்தில் களமிறங்கியுள்ளது நாசா.

’சோலார் ப்ரோப் ப்ளஸ்’ எனும் சூரியனுக்கு அருகில் விண்கலம் அனுப்பும் புதிய திட்டத்தை செயல்படுத்த நாசா முடிவு செய்துள்ளது.

பூமியில் இருந்து மணிக்கு 645 கி.மீ. வேகம் வேகத்தில் சென்றால் சூரியனை அடைய 20 ஆண்டுகள் ஆகுமாம். அப்படி இருக்கும் கடினமான பயணத்தை முறியடித்து விண்கலம் அனுப்பும் புதிய திட்டத்தில் நாசா களமிறங்கியுள்ளது. சூரியனின் மேற்புற சராசரி வெப்பநிலை 10,000 டிகிரி ஃபாரன்ஹீட். அவ்வளவு கடுமையான வெப்பத்தில் விண்கலத்தை அனுப்புவது சவாலான ஒன்று என்பது விஞ்ஞானிகளின் கருத்து. சூரியனின் வெப்பத்தை தாங்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் விண்கலம் வடிவமைக்கப்படவுள்ளது. இந்த விண்கலம் மிக குறுகிய தொலைவில் சூரியனால் ஏற்படும் வானிலை மாற்றங்கள் குறித்து தகவல் அனுப்பும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு மே மாதம் இந்த விண்கலம் சூரியனை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இந்த திட்டம் தொடர்பாக சில முக்கிய தகவல்களை நாசா அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சூரியனைப் பற்றி ஆராய்வதற்காக நாசாவின் ‘ஸ்கைலாப்’ என்ற முதல் விண்கலம் விண்வெளி வீரர்களுடன் 1974 பிப்ரவரியில் சென்றது குறிப்பிடதக்கது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...