ஸ்மார்ட் போன் சார்ஜ் தீர்ந்து விடாமல் பாதுகாக்க என்ன செய்யலாம்?

ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் மிகப்பெரிய பிரச்னை சார்ஜ் தீர்ந்து போவதுதான். இதைத் தவிர்க்க பவர் பேங்க்கைக் கையோடு தூக்கிக் கொண்டு திரிய வேண்டியுள்ளது.

பேட்டரி சார்ஜைப் பாதுகாக்க சில எளிய வழிகள் இவை:

வைபரேட் எனும் எதிரி

போன் வைபரேட் மோடில் இருந்தால் பேட்டரி சார்ஜ் விரைவில் குறையும். அதனால், முடிந்தளவு வைபரேட் மோடினை கட் செய்வது நல்லது. அதேபோல ஸ்மார்ட்போன் கீபேடில் டைப் செய்யும்போது சத்தம் கொடுக்கும் ஹேப்டிக் ஃபீட்பேக் (haptic feedback) எனும் ஆப்ஷனையும் ஆஃபில் வைத்துக் கொள்வது நல்லது.

வால்பேப்பர்கள்

உங்கள் ஸ்மார்ட்போன் ஆமோல்டட் (AMOLEDED) டிஸ்ப்ளே கொண்டதாக இருந்தால், கருப்பு நிற வால்பேப்பர்களைப் பயன்படுத்தினால் அது பேட்டரியை அதிகம் சாப்பிடாது.
லொகேஷன் டிராக்கிங்

ஸ்மார்ட் போனில் நாம் இன்ஸ்டால் செய்துள்ள பெரும்பாலான செயலிகள் நமது இருப்பிடத்தை லொகேஷன் டிராக்கிங் மூலமாக டிராக் செய்து கொண்டே இருக்கும். லொகேஷன் டிராக்கிங் சிஸ்டம் உங்கள் பேட்டரி சார்ஜை விரைவில் குறைக்கும் என்பதால், தேவையில்லாத நேரங்களில் அதை ஆஃப் செய்து வைப்பது சிறப்பு.

ஆண்ட்ராய்டு அப்டேட்

ஸ்மார்ட்போன் செயல்பாட்டினை அதிகரிக்க கூகுள் நிறுவனம் அவ்வபோது இயங்குதளத்துக்கான அப்டேட்டுகளை அளிப்பதுண்டு. கூகுள் அளிக்கும் ஒவ்வொரு அப்டேட்டுகளை தவறாமல் இன்ஸ்டால் செய்வது பேட்டரியின் ஆயுளை அதிகரிக்கும்.

கைகொடுக்கும் ஏர்பிளேன் மோட்

ஸ்மார்ட்போனில் உள்ள ஏர்பிளேன் மோட் எனும் ஆப்ஷன் உங்கள் வெளியுலகத் தொடர்பை மட்டுமல்ல, வீடியோ போன்ற மல்டிமீடியா செயலிகளுக்குத் தேவையான பேட்டரி சார்ஜினை அதிகநேரம் அளிக்கவல்லது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நெட்வொர்க் சரியாக இல்லாத இடங்களில் நீங்கள் பயணிக்கும்போது ஸ்மார்ட்போன் ஆண்டெனா அதிகப்படியான பேட்டரி பயன்பாட்டைக் கொண்டிருக்கும் என்பதால், அதுபோன்ற சூழலில் ஏர்பிளேன் மோடுக்கு மாறிவிடுங்கள்.

ஜிபிஎஸ், வைஃபை மற்றும் ப்ளுடூத்

தேவையற்ற நேரங்களில் ஜிபிஎஸ், ப்ளுடூத் போன்றவற்றை ஆஃப் செய்து விடுங்கள். அதேபோல மொபைல் நெட்வொர்க் மூலம் இணையத்தில் இணைந்திருந்தால் வைஃபை இணைப்பைத் துண்டித்து விடுங்கள்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...