4 கேமராவுடன் ஜியோனி எஸ்10: இன்று அறிமுகம்

ஜியோனி நிறுவனத்தின் அடுத்த படைப்பாக, ஜியோனி எஸ்10 ஸ்மார்ட்ஃபோன் இன்று வெளியாகிறது. இதன் சிறம்பம்சம் 4 கேமராவுடன் வருகிறது என்பதுதான்.

சீனாவில் இன்று மாலை நடைபெறும் விழாவில் ஜியோனி எஸ்10 ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கு முன்பாக ஜியோனி சார்பில் வெளியான போன் குறித்த டீஸரில் ஸ்மார்ட்ஃபோனின் பெயரும், போனில் 4 கேமராவும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டு விட்டது. இதில், முன்பக்கம் இரண்டு கேமராவும், பின்பக்கம் 2 கேமராவும் உள்ளது.

பின்பக்கம் உள்ள இரண்டு கேமராவில் ஒன்று 16 மெகாபிக்சலும், மற்றொன்று 8 மெகாபிக்சல் திறனும் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைப்போல முன்பக்க கேமராவில் ஒன்று 20 மெகாபிக்சலும், மற்றொன்று 8 மெகாபிக்சல் திறனும் கொண்டதாக இருக்கும் எனத் தெரிகிறது.

முன்பக்க கேமரா, ஒருவேளை 20 மெகாபிக்சல் திறனுடன் வந்தால் செல்ஃபி பிரியர்களுக்கு மகிழ்ச்சிதான்.

5.5 இன்ச் ஹெச்டி திரை, 6 ஜிபி ரேம், 64ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் வசதிகளுடன் ஜியோனி எஸ்10 வெளியாகும் எனத் தெரிகிறது. 3700 மில்லி ஆம்பியர் திறன் கொண்ட பேட்டரி வசதி இருக்கும் என சொல்லப்படுகிறது. கருப்பு மற்றும் கோல்ட் கலர் என இரண்டு வண்ண நிறங்களில் அசத்த வரும் ஸ்மார்ட்ஃபோனில், பிங்கர் பிரின்ட் வசதியும் உள்ளது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...