பேடிஎம் பேமன்ட் வங்கி, இன்று தொடக்கம்!

ஏர்டெல், இந்தியா போஸ்ட் என்ற 2 பேமன்ட் வங்கிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவதாக பேடிஎம் பேமன்ட் வங்கி இன்று தொடங்கப்பட்டது.

இணையவழி வர்த்தக நிறுவனமான பேடிஎம் சேவையை தனியார் நிறுவனங்கள் முதல் டீ கடைகள் வரை அனைவரும் இப்போது பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், தற்போது இணைய வர்த்தக நிறுவனமான பேடிஎம் இன்று தனது புது சேவையான பேடிஎம் பேமன்ட் வங்கி சேவையை தொடங்கியுள்ளது. இதன் மூலம் இலவசமாக எளிய வழியில் இணைய வழி பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். இந்த பேமன்ட் வங்கியில் கணக்கு தொடங்கும் முதல் மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு 20,000 ரூபாய்க்கு 250 ரூபாய் கேஷ் பேக் செய்யப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் டொபசிட் செய்யும் பணத்திற்கு 4 சதவீதம் வட்டி வழங்குகிறது.

ஏற்கனவே ஏர்டெல் 7.5 சதவீதமும், இந்தியா போஸ்ட் 5.5 சதவீதமும் வட்டி வழங்கும் நிலையில், பேடிஎம் குறைந்த அளவில் வட்டி வழங்குகிறது.

இதில் கணக்கு தொடங்க விரும்புபவர்கள் www.paytmpaymentsbank.com என்ற இணையதளத்தில் சென்று Paytm iOS அப்ளிகேஷன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இன்னும் ஒரு வருடத்தில் பேடிஎம் 31 இடங்களில் தனது வங்கி கிளைகளையும், 3ஆயிரம் கஸ்டமர் சர்வீஸ் மையங்களையும் திறக்க உள்ளது. மேலும், வரும் 2020ஆம் ஆண்டிற்குள் 500 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற திட்டமிட்டுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...