2.5 நிமிடத்தில் ஆபரேஷன்: அசத்துது ரோபோ!

நவீன தொழில்நுட்ப உலகில் மனிதனை விட துரிதமாகவும் தெளிவாகவும் அனைத்து செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது ரோபோக்கள். அனைத்து துறைகளிலும் மனிதனை விட பல சாதனைகளை படைத்துவரும் ரோபோ மருத்துவத்துறையில் செய்யும் பல அறிய செயல்கள் வினோதமாகவே உள்ளது. ரோபோகள் மருத்துவர்களால் செய்ய முடியாத பல செயல்களை நொடிப் பொழுதில் செய்து முடித்து விடுகிறது.

அமெரிக்காவில் உள்ள யூட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு ஒன்று, 2.5 நிமிடத்தில் அறுவை சிகிச்சை செய்யக்கூடிய ரோபோவினை வடிவமைத்துள்ளனர். பொதுவாக மூளை அறுவை சிகிச்சை செய்ய மனிதர்களால் குறைந்தது இரண்டு மணி நேரமாகும். ஆனால் அதே அறுவை சிகிச்சையை வெறும் 2.5 நிமிடத்தில் செய்யக்கூடிய ஆற்றலைக் கொண்டிருக்கின்றது இந்த ஸ்மார்ட் ரோபோ. மேலும் CT ஸ்கேன் தொழில்நுட்பத்தில் மூளையின் பகுதிகளை பிரித்து அறியக்கூடிய திறனையும் இந்த ரோபோ பெற்றுள்ளது.

இதுகுறித்து நரம்பியல் நிபுணர் வில்லியம் கான்வெல் கூறும்போது, தொழில்நுட்ப இயந்திர உலகில் அறுவை சிகிச்சை செய்ய யாரும் ரோபோக்களை பயன்படுத்தவில்லை ஏனெனில், மூளை அறுவை சிகிச்சை, மருத்துவர்களுக்கே சவாலான ஒன்று. மிக துல்லியமாக செய்யபடவேண்டிய அந்த அறுவை சிகிச்சையை CT படங்களைப் பயன்படுத்தி பாதுகாப்பாகவும் நுணுக்கமாகவும் விரைவில் செய்து விடுகிறது இந்த ரோபோ. மூளை அறுவை சிகிச்சையில் மட்டுமல்ல, இடுப்பு தொடர்பான ஆபரேஷன்களிலும் இந்த சாதனம் பயன்படுத்தபடுகிறது. மருத்துவத்துறையில் முக்கிய பங்கு வகிக்கும் ரோபோவின் மூலம் பல உயிர்கள் மரணத்திற்கு தள்ளப்படுவது தடுக்கப்படுகிறது. மருத்துவத்துறைக்கு வரப்பிரசாதமாக கருதப்படும் இந்த ரோபோ, வரவேற்கத் தக்க ஒன்றாகும்’ என தெரிவித்துள்ளார்

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...