விண்வெளி உயிரினத்துக்கு கலாம் பெயர்: நாசா கவுரவம்

சர்வதேச விண்வெளி மையத்தில் கண்டறியப்பட்ட பாக்டீரியா வகையை சேர்ந்த புதிய உயிரினத்துக்கு அப்துல் கலாமின் நினைவாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் ஐ.எஸ்.எஸ். என்று அழைக்கப்படும் சர்வதேச விண்வெளி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு செய்துவருகின்றனர். இந்த மிதக்கும் விண்வெளி மையம் பூமியில் இருந்து 400 கி.மீ. உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் அங்கு புதிய உயிரினம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த புதிய உயிரினம், பாக்டீரியா வடிவம் போன்றது. இந்த உயிரினம் பூமியில் காணப்படுவதில்லை. சர்வதேச விண்வெளி நிலையத்தில் மட்டுமே காணப்படுபவை. இந்த உயிரினத்துக்கு மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் பெயரை விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர். அதாவது, சொலிபேசில்லஸ் கலாமி என்று பெயர் வைத்துள்ளனர். விண்வெளி அறிவியலில் கலாமின் நிபுணத்துவத்தை நினைவு கூறும் விதமாக இப்பெயர் சூட்டப்பட்டதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இதுபற்றி நாசாவின், ‘ஜெட் புரோலிபியன் லேபரட்டரி’யின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி கஸ்தூரி வெங்கடேஸ்வரன் கூறும்போது, ’இந்த பாக்டீரியாவின் பேரினம், சொலிபாசில்லஸ் ஆகும். நானும் தமிழன் என்ற முறையில் கலாம் விண்வெளி ஆராய்ச்சியில் அளித்துள்ள பங்களிப்புகளை அறிவேன்’ என்றார்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...