இஸ்ரோ, நாசா இணைந்து புதிய சேட்டிலைட்!

நிலநடுக்கம், கடல் மட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறியும் வகையில், இந்தியாவின் இஸ்ரோவும் அமெரிக்காவின் நாசாவும் இணைந்து நிசார் (NISAR) என்ற புதிய செயற்கைக்கோளை உருவாக்கி வருகிறது.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவுடன் முதன் முறையாக இணைந்து செயற்கைக்கோளை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. நாசா -இஸ்ரோ சிந்தடிக் அபெர்ச்சர் ராடார் (NASA-ISRO Synthetic Aperture Radar) என்ற இந்த செயற்கைகோள் மூலம் பூமியில் ஏற்படும் நிலநடுக்கம், கடல்மட்டம் அதிகரிப்பு, எரிமலை சீற்றம், உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறிய முடியும்.

இந்த செயற்கைக்கோள் 1.5 பில்லியன் டாலர்கள் செலவில் உருவாக்கப்படுகிறது. இந்த நிசார்

செயற்கைக்கோளை வரும் 2021-ம் ஆண்டில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்தியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...