ரான்சம்வேர் - பணம் பறிக்கும் புதிய வைரஸ்


தற்போது இணைய உலகத்தை ரான்சம்வேர் என்ற ஒரு வைரஸ் தாக்கி வருகிறது. ரான்சம்வேர் என்பது வைரஸை பயன்படுத்தி பணம் பறிக்கும் முறை. அதாவது இந்த வைரஸ் உங்கள் கணினியை தாக்கினால், அதில் உள்ள முக்கியமான டேட்டாக்கள் அனைத்தும் முடக்கப்படும். அதன்பின், ஹக்கர்கள் பணம் கொடுத்தால் தான் அந்த டேட்டாக்களை விடுவிப்பேன் என்று மிரட்டுவது தான் ரான்சம்வேர். இப்போது இணையத்தில் இந்த வைரஸ் தான் அதிகமாக பரவி வருகிறது. முக்கிய நாடுகளில் உள்ள அரசாங்க தளங்கள் மற்றும் பல நிறுவனங்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் இந்த வைரஸ்கள் வானகிரிப்ட், டபிள்யூகிரை ஆகிய பெயர்களில் உள்ளது. இதிலிருந்து உங்கள் கணினியை அல்லது ஸ்மார்ட்போனை பாதுகாக்க என்னென்ன வழிகள் என்று பார்க்கலாம்.

1.தெரியாத முகவரியிலிருந்து வரும் இ-மெயிகளை திறக்க வேண்டாம். இ-மெயில் மூலமாகத்தான் ரான்சம்வேரை ஹக்கர்களை அதிக அளவில் பரப்பி வருகிறார்கள்.

2.இ-மெயிலில் வரும் அட்டாச்மென்ட்டை கவனத்துடன் ஸ்கேன் செய்த பின்பு தான் திறக்க வேண்டும்.

3.கணினியின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஆண்ட்டி வைரஸ் அகியவற்றை அப்டேட் செய்வது நல்லது.

4.ரான்சம்வேர் தாக்குதல் முன்கூட்டியே கணிக்கப்பட்டு, அதற்கேற்ப தடுப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டு அப்டேட்டுகள் வெளியிடப்படுவதால், இது உங்கள் கணினியை ரான்சம்வேர் வைரஸிடம் இருந்து பாதுகாக்க உதவும்.

5.உங்கள் கணினியை அவ்வப்போது ஸ்கேன் செய்வது நல்லது. பென் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை கணினியுடன் இணைக்கும்பொழுது அதை முழுவதுமாக ஸ்கேன் செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.

6.உங்களது பாஸ்வேர்டை 180 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

7.கணினியிலுள்ள டேட்டாவை அடிக்கடி பேக்கப் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. இதன் மூலம், ரான்சம்வேர் தாக்குதல் நடந்தாலும் பேக்கப் எடுத்து வைத்த டேட்டாவை மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஹேக்கர்களுக்குப் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

8-உங்கள் கணினி ரான்சம்வேர் தாக்குதலுக்கு உள்ளானால், உடனடியாக இணைய இணைப்பைத் துண்டிக்க வேண்டும்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...