இணைய தாக்குதலில் லாசரஸ் குழுமத்துக்கும் பங்கு உண்டா?

இணையத்தளம்  தாக்குதலில் லாசரஸ் குழுமத்துக்கும் பங்கு உண்டா?
உலகளாவிய இணையத்தளம் தாக்குதலுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? இப்போதுள்ள ஒரு கருத்து வட கொரியா என்பது. ஆனால் இதுவரை நமக்கு தெரிந்ததை வைத்து இந்த முடிவுக்கு வந்துவிட முடியாது.
லாசரஸ் குழுமத்தை பற்றி உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் அக்குழு செய்த `கைங்கர்யங்கள்` பற்றி உங்களுக்கு தெரிந்தே இருக்கும்.
2014 ஆம் ஆண்டில், 'சோனி பிக்சர்ஸ்' இணைய தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் , 2016இல் வங்கதேச வங்கியின் இணைய தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகிய இரண்டும் மிகவும் இந்த அதிநவீன குழுவால் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
லாசரஸ் குழுமம் சீனாவில் இருந்துகொண்டு, ஆனால் வட கொரியாவின் சார்பாக , இயங்கியதாக பரவலாக நம்பப்படுகிறது
கூகுள் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆய்வாளர் நீல் மேத்தாவின் ஒரு கண்டுபிடிப்புக்கு பின்னர், சமீபத்திய இணைய தாக்குதலை லாசரஸ் குழுமத்தோடு பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கையோடு தொடர்புபடுத்தியுள்ளனர்.
சமீபத்திய இணையத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ள `வான்னாக்ரை` தீய மென்பொருளில் கண்டறியப்பட்டுள்ள குறியீட்டிற்கும், கடந்த காலத்தில் லாசரஸ் குழுமத்தால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் பிற கருவிகளுக்கும் இடையில் ஒற்றுமைகளை நீல் மேத்தா கண்டறிந்திருக்கிறார்.
இது ஒரு மெல்லிய நூலிழை போன்ற ஆதாரம்தான் ஆனால் பரிசீலிக்கப்படவேண்டிய பிற தடயங்களும் உண்டு.
`வான்னாக்ரை` தீய மென்பொருளின் உண்மையான பதிப்பின் குறியீட்டிற்குள் அமைக்கப்பட்டிருக்கும் நேரம், சீன மண்டல நேரமான யுடிசி +9 என்பதாகும்.
கோப்புக்களை மீட்டெடுப்பதற்கு கோரப்படும் பிணைத்தொகை எந்திரம் மொழிபெயர்த்த ஆங்கிலம் போல் தோன்றுகிறது. ஆனால், அதில் ஓர் உள்ளூர் சீன மொழி பேசுபவரால் எழுதப்பட்டுள்ளதாக பாதுகாப்பு நிபுணர் பேராசிரியர் அலென் உட்வார்டு சுட்டிக்காட்டியுள்ளார்.
உங்கள் கணினி `சைபர்' தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறதா?
``இது மிகவும் பலமற்ற , மற்றும் சூழ்நிலை சார்ந்த ஆதாரம் தான் என்பதை நீங்கள் பார்க்க முடியும்``, என்று தெரிவித்திருக்கும் போராசிரியர் உட்வார்டு, "என்றாலும், மேலதிக ஆய்வு நடத்துவதும் நல்லது" என்கிறார்.
குறியீட்டிற்கு அப்பாற்பட்டு
இது தொடர்பான ஆய்வு ஏற்கெனவே நடைபெற்று வருகிறது.
`வான்னாக்ரை` தீய மென்பொருளின் பிறப்பிடம் பற்றி அறிந்துகொள்ள நீல் மேத்தாவின் கண்டுபிடிப்பு மிக முக்கியமான துப்பு என்று தெரிவித்திருக்கும் ரஷ்ய பாதுகாப்பு நிறுவனம், கஸ்பர்ஸ்கைய், உறுதியான முடிவுக்கு வருவதற்கு முன்னால், `வான்னாக்ரை` யின் முந்தைய பதிப்புகள் பற்றி அதிக தகவல்கள் அவசியமாகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
"உலகிலுள்ள பிற ஆய்வாளர்கள் இதன் ஒற்றுமைகளை ஆராய்ந்து. `வான்னாக்ரை` தீய மென்பொருளின் தோற்றம் பற்றி அதிக உண்மைகளை கண்டறிய முயல்வது முக்கியமானது என்று நாம் நம்புகிறோம்" என இந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
ஸ்விஃப்ட் வங்கி வலையமைப்பில் ஊடுருவியதா அமெரிக்கா?
உலகளாவிய இணையதாக்குதலில் பல அரசு அமைப்புகள் முடங்கின
முன்னதாக, வங்கதேசத்தில் நடந்த இணையத்தாக்குதலை மீளாய்வு செய்தபோது, லாசரஸ் குழுமத்தோடு அதனை தொடர்புபடுத்தும் உண்மைகள் மிக குறைவாக இருந்தன.
காலப்போக்கில், அதிக சான்றுகள் கிடைத்ததுதான் அவற்றை இணைத்து மிகவும் உறுதியாக கூற நம்மையும், பிறரையும் அனுமதித்தது, என்று இந்த நிறுவனம் கூறுகிறது.
பல்வேறு புள்ளிகளை இணைப்பதற்கு தொடர் ஆய்வு முக்கியமானதாக அமையும்.
இணையத்தாக்குதலை யார் செய்தார் என்று சொல்வது கடினம். அவ்வாறு செய்வது பெரும்பாலும் உறுதிப்பாட்டை விட ஒருமித்த கருத்தையே நம்பியிருக்கிறது.
எடுத்துக்காட்டாக கூறுவதாக இருந்தால், 'சோனி பிக்சர்ஸ்' இணையத்தாக்குதலில் ஈடுபட்டதாக வட கொரியா ஒருபோதும் ஒப்பு கொண்டதில்லை. ஆனால். பாதுகாப்பு ஆய்வாளர்களும், அமெரிக்க அரசும் இதனை வட கொரியாவே செய்ததாக உறுதியாக நம்புகின்றன. ஆனால் இதில் இந்த இரு தரப்புமே தவறான ஆதாரம் இருக்கக் கூடிய சாத்தியக்கூறை நிராகரிக்கவில்லை.
ரான்சம்வேர் இணைய தாக்குதல் ; 99 நாடுகளில் உள்ள கணினிகள் பாதிப்பு
திங்களன்று அடுத்த இணைய தாக்குதல் ; எச்சரிக்கும் கணினி பாதுகாப்பு வல்லுநர்கள்
திறமையான ஹேக்கர்கள் இதுபோன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, வட கொரியாவில் இருந்து செய்யப்பட்டதாக தோன்றுகிற வகையிலும் இதனை செய்திருக்கலாம்.
நீதிமன்றத்தின் முன்னால் எடுபடாது
`வான்னாக்ரை` தீய மென்பொருள் விடயத்தில், லாசரஸ் குழுமம் முன்னால் நடத்தியிருக்கும் தாக்குதல்களின் குறியீடுகளின் பிரதிகளை அப்படியே ஹேக்கர்கள் எடுத்து பயன்படுத்தி இருக்கவும் வாய்ப்புள்ளது.
பகிரப்பட்ட குறியீடு பிந்தைய பதிப்புகளில் விலக்கப்பட்டுள்ளதால், `வான்னாக்ரை` தீய மென்பொருளுக்குள் ஏமாற்றும் செய்திகள் சாத்தியமாக இருக்கலாம். ஆனால், பொருத்தமற்றது என்று கஸ்பர்ஸ்கை கூறியுள்ளது.
இங்கு ` இது இப்படி இருந்திருந்தால், அல்லது அப்படி இருந்தால்`` போன்ற நிபந்தனை சார்ந்த சூழ்நிலைகள் காணப்படுகின்றன, என்றார் உட்வார்ட்.
"அவ்வாறு இருந்தால், நீதிமன்றத்தில் இது எடுபடாது ஆனால், ஆழமாக ஆராய்வது நல்லது. ஒருமித்த கருத்தாக உறுதிபடுத்தல் சார்பில், தற்போது வட கொரியாவாக இருக்கலாம் என்று இனம் காணப்பட்டுள்ளது.
ரான்சம்வேர் இணைய தாக்குதல் : காரணமானவர்களை கண்டுபிடிக்க திணறும் யூரோபோல்
சைபர் தாக்குதலால் பிபிசி இணையதளங்கள் முடங்கின
`வான்னாக்ரை` எங்கிருந்து தோன்றியது என்பது பற்றியதில், வட கொரியா செய்தது என்று விவாதிக்கப்படுவதற்கு எதிரான மிக வலுவான கருத்தும் உள்ளது.
முதலில், மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனா ஒன்றாக உள்ளது. கோப்புக்களை மீட்டெடுப்பதற்கு கேட்கப்பட்ட தொகை பற்றி சீன மொழியில் எழுதப்பட்டிருப்பதை ஹேக்கர்கள் உறுதிசெய்திருந்தனர்.
தன்னுடைய மிகவும் முக்கிய நட்பு நாட்டை எதிரியாக பாவித்து வட கொரியா செய்யுமென தோன்றவில்லை. ரஷ்யாவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, வட கொரியாவின் இணையதாக்குதல்கள் பெரும்பாலும் அரசியல் நோக்கத்தை மனதில் வைத்துதான் நடத்தப்பட்டுள்ளது.
'சோனி பிக்சர்ஸ்' விவகாரத்தில், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னை கேலி செய்த ஒரு திரைப்படம் வெளிவருவதை பற்றிய பேட்டி வெளியாவதை தடுப்பதற்காக ஹேக்கர்கள் செய்திருந்தனர்.
ஜெர்மனி: ஒரு மில்லியன் இணைய தொடர்புகள் ஹேக்கர்களால் துண்டிப்பு
இதற்கு மாறாக, `வான்னாக்ரை` தீய மென்பொருள் கண்மூடித்தனமாக எதையும், எல்லாவற்றையும் பாதிப்படைய செய்யக்கூடியது.
கடைசியாக, பணம் சேர்ப்பதற்காக மட்டுமே இந்த திட்டம் தீட்டப்பட்டிருந்தால், இந்த விடயத்திலும், அத்திட்டம் வெற்றியடையவில்லை. குற்றவாளிகளின் பிட்காயின் கணக்குகள் ஆய்வில் சுமார் 60 ஆயிரம் டாலர் (46,500 யூரோ) மட்டுமே பிணைத்தொகையாக சேர்ந்துள்ளது.
2 லட்சத்திற்கு மேலான கணினிகள் பாதிப்படைந்துள்ள நிலையில், அதிகப்படியான தொகை கிடைத்திருக்க வேண்டும். ஆனால், இன்னும் தெளிவாக இல்லாத மற்ற அரசியல் நோக்கத்திற்காக, கவனத்தை திசைதிருப்பும் முயற்சியாகவும் மீட்புத்தொகையாக பிட்ஸ்காயின் பெறுவது பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
வட கொரியாவின் அறிவுரை இல்லாமல் லாசரஸ் குழுமம் தனிப்பட்ட முறையில் பணிபுரிந்து இதனை நடத்தியிருக்கலாம்.
விடைகளைவிட கேள்விகளே அதிகம்.
இணையப்போரில் உண்மைகள் வெளிவருவது மிகவும் கடினம். 

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...