ஸ்மார்ட்ஃபோனில் ஐந்தே நிமிடங்களில் முழு சார்ஜ் ஏறும் பேட்டரிகள்

ஸ்மார்ட்ஃபோனில் வெறும் ஐந்து நிமிடங்களில் முழுஅளவு சார்ஜ் எட்டும் திறன் கொண்ட பேட்டரிகள் அடுத்த ஆண்டு முதல் வாடிக்கையாளர்களுக்கு சந்தையில் கிடைக்க உள்ளன.

2015 ஆம் ஆண்டில் இஸ்ரேலிய ஸ்டார் அப் நிறுவனமான ஸ்டோர் டாட் அதன் லாஸ் வேகாஸில் நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்னணு கண்காட்சியில் இந்த தொழில்நுட்பத்தை முதன்முதலில் காட்டியது.

2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த பேட்டரிக்கள் உற்பத்திக்கு வரும் என எதிர்பார்ப்பதாக தலைமை செயல் அதிகாரி டோரோன் மையெர்டோர்ஃப் பிபிசியிடம் கூறியுள்ளார்.

எனினும், தொழில்நுட்ப வல்லுநரான பென் வுட், இதுகுறித்து சொல்லப்படும் தகவல்கள் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த எந்த உற்பத்தியாளருடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்பது குறித்து வெளிப்படுத்த முடியாது என்று மையெர்டோர்ஃப் கூறியுள்ளார்.

2015ல் பிபிசியிடம் பேசிய அவர், தன் நிறுவனத்தின் பேட்டரிக்கள் பாரம்பரியம் அல்லாத எதிர்வினைகளை ஆற்றக்கூடிய பொருட்களை கொண்டிருந்ததாகவும், ஆனோடிலிருந்து ஓர் காதோடிற்கு அயன்கள் வழக்கத்துக்கு மாறாக வேகமாக பரிமாற்றம் நடப்பதாகவும் கூறினார்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...