நாளை கிடைக்குமா சனிக்கோளின் புதிய படங்கள்..?:விண்வெளியில் மற்றொரு சாதனை

20 ஆண்டுகளுக்கு முன் அனுப்பப்பட்ட கேஸினி விண்கலம், சனிக் கோளுக்கும் அதன் வளையங்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறது.

மிக முக்கியத்துவம்வாய்ந்த வானியல் சாதனையாகக் கருதப்படும் இந்த நிகழ்வு மூலம், சனிக் கோளின் மிகத் துல்லியமான புகைப்படங்கள் கிடைக்கும். இந்தப் பயணம் தொடங்கியதில் இருந்து சுமார் 24 மணி நேரத்துக்கு விண்கலத்தைப் பூமியில் இருந்து தொடர்பு கொள்ள முடியாது. பயணம் வெற்றிகரமாக முடிந்தால் இந்திய நேரப்படி நாளை பிற்பகலில் கேஸினி விண்கலம் பூமியுடன் தொடர்பு கொள்ளும். உடனடியாக சனிக்கோளின் புதிய புகைப்படங்கள் கிடைக்கும்.

1997-ஆம் ஆண்டு அமெரிக்காவும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமும் இணைந்து இந்த விண்கலத்தை அனுப்பின. 2004-ஆம் ஆண்டு முதல் அது சனிக்கோளைச் சுற்றி வருகிறது. இன்னும் 22 முறை மிக நெருக்கமாகச் சுற்றிவந்துவிட்டு, சனிக்கோளின் வளி மண்டலத்தில் மோதி விண்கலம் சாம்பலாகும்.

கேஸினியின் சாதனைப் பயணத்தைக் குறிக்கும் வகையில் கூகுள் இணையதளம் தனது முகப்புப் பக்கத்தில் கேஸியின் படத்தை வெளியிட்டிருக்கிறது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...