உலக எரிமலைகளை கண்காணிக்க புதிய செயற்கைக்கோள் வசதி

சில வாரங்களுக்கு முன் எட்னா எரிமலையை ஒட்டி படம்பிடிக்கச் சென்ற பிபிசி செய்தியாளர் குழுவினர் அதன் திடீர் வெடிப்பில் சிக்கிக்கொண்டனர்.

அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினார்கள்.

எரிமலையின் வெடிப்பை முன்கூட்டியே கணிக்கக்கூடிய புதிய வழி உருவாக்கப்பட்டிருப்பது தொடர்பான செய்தி சேகரிப்பின் ஒரு பகுதியாகவே அவர்கள் அங்கே சென்றிருந்தனர் என்பது இதுவரை வெளியிடப்படாத செய்தி.

செயற்கைக்கோள்களை பயன்படுத்தி உலகில் இருக்கும் 1500 எரிமலைகளையும் 24 மணி நேரமும் கண்காணிப்பதன் மூலம் எரிமலை வெடிப்புகளை முன்கூட்டியே கணிக்கும் புதிய முறை ஒன்றை பிரிட்டிஷ் விஞ்ஞானிகல் உருவாக்கியுள்ளனர்.

இதுவரை கண்காணிக்கப்படாமல் இருக்கும் ஏழை நாட்டு எரிமலைகளை சுற்றி வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு இந்த புதிய முயற்சி மிகப்பெரும் நன்மை செய்யும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

அந்த புதிய முயற்சி குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தி.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...