எமிலி இருக்க, கவலை எதுக்கு? உயிர் காக்கும் ரோபோ

கடலில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. அகதிகளின் வருகையும், போதிய எண்ணிக்கையில் உயிர்காக்கும் வீரர்கள் இல்லாததும் உயிரிழப்புகளுக்குக் காரணம். இந்த நிலையை மாற்றி, உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது ஒரு ரோபோ.

அமெரிக்க கப்பல் படை தயாரிப்பான எமிலி, ஒரு ரோபாட்டிக் லைஃப்கார்டு. பலரது கூட்டு முயற்சியால் தயாரான எமிலி, கிட்டத்தட்ட ஒரு நீச்சல் வீரனைப் போன்றது. நீச்சல் அடித்துக் கொண்டே உயிர்களைக் காப்பாற்றும் ஆற்றல் கொண்ட எமிலி, உதவி வேண்டுபவர் இருக்கும் திசை நோக்கி நீந்தி, கப்பல் இருக்கும் பகுதிக்கு அவரை பத்திரமாக கொண்டு சேர்த்துவிடும். ரிமோட் மூலம் அதன் வேகத்தையும், திசையையும் கட்டுப்படுத்த முடியும்.

நீச்சல் தெரியாதவர்களை சுமந்துகொண்டு வேகமாக நீந்தும் எமிலி 4 அடி நீளமும், 11 கிலோ எடையும் கொண்டது. மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் எமிலியால் நீந்த முடியும். ரேடியோ அலைகள் உதவியுடனும், ரிமோட் மூலமும் இதை கட்டுப்படுத்தலாம். எமிலியில் இருக்கும் கேமரா மூலம் அதன் பாதையை அறியலாம். ஹெலிகாப்டர், கப்பல், பாலம் போன்ற எந்த இடத்தில் இருந்தும் எமிலியை தண்ணீரில் வீசிவிட்டு, பின் ரிமோட் மூலம் அதை தேவையான பகுதிக்கு அனுப்பலாம்.

போர் விமானங்கள் செய்யப்படும் கடினமான பொருட்களால் ஆன இந்த உயிர்காக்கும் எந்திரத்துடன் 8 பேர் வரை நீந்திச் செல்ல முடியும். கடந்த ஆண்டு கடலில் சிக்கிய சிரியா அகதிகள் 300க்கு மேற்பட்டவர்களை காப்பாற்றியது. தென் கொரியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகள் எமிலியை பயன்படுத்துகின்றன.

தொழில்நுட்பத்தை எப்படி, எதற்கு பயன்படுத்துகிறோம் என்பதில் தான் அந்த தொழில்நுட்பத்தின் வெற்றி இருக்கிறது. அந்த வகையில் எமிலி மனித உயிர்களை காப்பாற்றும் உன்னத சேவையை செய்து வருகிறது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...