செவ்வாய் கிரகத்திலிருந்து வெளியேறிய காற்று மாயமானது எங்கே?

சிவப்பு கிரகம் என்று அறியப்படும் செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் மாவென் செயற்கைக்கோள் மற்றும் செவ்வாயின் மேற்பரப்பில் கியூரியாசிட்டி ஊர்தியை அனுப்பி ஆய்வு மூலமும் எடுத்த அளவீடுகளை ஒப்பிட்டு பார்த்ததும், இன்று பூமியில் இருப்பது போன்று வாயுக்கள் செறிந்திருந்த கிரகமாக செவ்வாய் இருந்திருக்கலாம் என்பது சுட்டிக்காட்டப் படுகின்றது.

இருப்பினும், இந்த வாயுக்களின் கலவை வேறுபட்டதாக இருந்திருக்கலாம்.

செவ்வாய் கிரகத்தில் தொடக்கத்தில் இருந்த வாயுக்களில் கரியமில வாயு குறிப்பிட்ட அளவு இருந்திருக்கலாம்.

முற்கால உயிரினங்களுக்கு போதுமான வெப்பம் சூழ்நிலையை பசுங்குடில் வாயு அளிக்கும் என்பதால், இது காலநிலைக்கு முக்கியமானதாக இருந்திருக்கலாம்.



தொலைந்த காற்று

"செவ்வாய் கிரகத்தில் இருந்து வெளியேறியிருக்கும் வாயுக்களின் மொத்த அளவை கணக்கிடும் பணியில் தற்போது உள்ளோம். பூமியில் இருக்கும் வளிமண்டலத்தை போல மிக செறிந்ததாக செவ்வாய் கிரக வளிமண்டலம் இருந்திருக்கலாம் என்று ஊகிக்கிறேன்" என்று அமெரிக்காவின் பௌல்டரிலுள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் புரூஸ் ஜகோஸ்கைய் கூறியுள்ளார்.

"இதன் மொத்த அளவு 80-90 சதவீதம் வரை இருந்திருக்கலாம்" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசாவின் செவ்வாய் கிரக வளி மண்டலம் மற்றும் எளிதில் வலட்டையில் எவலூஸன் மிஷன் எனப்படும் மாவென் செயற்கைக்கோள் திட்டத்தின் தலைமை ஆய்வாளர் தான் பேராசிரியர் ஜகோஸ்கைய்.



2014 ஆம் ஆண்டு சிவப்பு கிரகமான செவ்வாயில் சென்றடைந்தது முதல் மாவென் செயற்கைக்கோள், அதனுடைய கலவை மற்றும் மேலடுக்கு வளி மண்டல செயல்பாட்டை ஆய்வு செய்து வருகிறது.

சைன்ஸ் இதழில் தற்போது வெளியிட்டுள்ள புதிய ஆய்வில், மந்த வாயு ஆர்கானின் உள்ளடக்க கூறுகள் விவரமாக விளக்கப்பட்டுள்ளன.

இந்த வாயுவின் அணுக்கள் மில்லியனுக்கு சில பகுதிகள் என்ற அளவில் சிறிய எண்களாக மட்டுமே உள்ளன.
கரியமில வாயு தகவல் அளிக்கும் ஆர்கான்

ஆர்கான் தகவல்கள் அளிக்கக்கூடியது. இதுவொரு மந்த வாயு: வளி மண்டலத்திலுள்ள பிற கூறுகளோடு அல்லது கற்கள் போன்ற மேற்பரப்பு பொருட்களில் இது வினைபுரியாது.

அவ்வாறு வினைபுரிவதாக இருந்தால், இத்தகைய வினைபுரிதல் மூலம் தான் இந்த வாயுவின் அளவு குறைந்திருக்கலாம் என்ற எண்ணுவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை.



எனவே. சூரியனிடம் இருந்து தொடர்ந்து பெரிய அலை போன்று வரும் செறிந்த துகள்களான சூரிய காற்று மூலம்தான் செவ்வாய் கிரகத்தில் இருந்த காற்று விண்வெளிக்கு இழுத்து செல்லப்பட்டிருக்கலாம் என்பதை இது சுட்டுகிறது.

இதன் அணுவானது, கனமானது முதல் லேசான பதிப்புகள், அல்லது ஐசோடோப்புகள் விகிதத்தில் இருந்து, செவ்வாய் கிரகத்தின் 4.5 பில்லியன் ஆண்டு காலத்தில் எவ்வளவு ஆர்கான் வாயு வெளியேறியிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

அதிக அளவிலான ஐசோடோப்பு செறிவை விட்டுவிட்டு சென்றுவிடும் வாயுவின் கனமான பதிப்பைவிட (ஆர்கான்-38) லேசான பதிப்பு (ஆகான்-36) எளிதாக செவ்வாய் கிரகத்தை விட்டு வெளியேறி விடுகிறது.

ஒப்பீட்டளவில் பார்க்கும்போது காணப்படும் ஏராளமான இரண்டு ஆர்கானிகளை பேராசிரியர் ஜாகோஸ்கையும் அவரது குழுவும் பயன்படுத்தியுள்ளது.
"சைன்ஸ் இன் ஆக்ஸன்"

செவ்வாய் கிரகத்தின் மேலடுக்கு வளி மண்டலத்தில் மாவென் செயற்கைக்கோளாலும், காலப்போக்கில் வெளியேறியிருக்கும் பெரும் பகுதி வாயுவை மதிப்பிடுவதற்கு செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஆய்வு செய்த நாசாவின் கியூரியாசிட்டி இயந்திர ஊர்தியின் ஆய்வாலும் இதன் அளவீடு மேற்கொள்ளப்பட்டது.

செவ்வாய் கிரகத்தில் எப்போதும் இருந்து வந்த மூன்றில் இரண்டு பங்கு ஆர்கான் விண்வெளிக்கு வெளியேறியுள்ளதை இந்த ஆர்கான் அளவீடுகளில் இருந்து அறிய முடிகிறது. இந்த வளி மண்டலத்தில் இருந்த பெருமளவிலான வாயு தொலைந்து போயுள்ளதாகவே இது பொருள்படுகிறது" என்று தனியார் ஆய்வாளர் பிபிசி உலக சேவையின் "சைன்ஸ் இன் ஆக்ஸன்" என்ற நிகழ்ச்சியில் விளக்கினார்.



ஆர்கான், வளி மண்டலத்தை புரிந்து கொள்வதற்கான முக்கியமான வாயு அல்ல. ஆனால், இது கரியமில வாயுவை பற்றி அறிய தருகிறது. ஆர்கானை அகற்றிவிடும் அதே வழிமுறையில்தான் கரியமில வாயும் அகற்றப்படுவதால் கரியமில வாயு குறைந்தள்ளதை அறிய முடிந்துள்ளது.

முக்கிய கண்டுபிடிப்புகள்

இதனால்தான், காலப்போக்கில் செவ்வாய் கிரகத்தின் வளி மண்டலத்திலிருந்து விண்வெளியில் கலந்து விட்ட கரியமில வாயுவின் பெருமளவை நம்மால் தீர்மானிக்க முடிகிறது"

உயிர் வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமான ஒரு சூழ்நிலையாக அமைகின்ற நீர்மநிலையில் தண்ணீரை செவ்வாய் கிரகம் அதனுடைய மேற்பரப்பில் எவ்வாறு தக்க வைத்துக் கொள்ள முடிந்தது என்ற நம்முடைய புரிதலுக்கு இந்த கண்டுபிடிப்புகள் மிகவும் முக்கியமானவை.

இன்று செவ்வாய் கிரகத்தில் இருக்கும் லேசான காற்று, அங்கு வெளிப்படும் தண்ணீரை தக்க வைக்காத ஒருவித அழுத்தத்தை உருவாக்குவதால், தண்ணீர் ஆவியாகிவிடுகிறது.

எனவே, பூமியில் உயிர் வாழ்க்கை கண்ணோட்டத்தில் கடந்த காலத்தில் அதிக செறிவான புலப்படாத வாயுக்கள் நிச்சயம் இருந்திருக்க வேண்டும்.

காலநிலை புதிர்

முன்னதாக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்த நீர்மநிலை தண்ணீர் இருந்துள்ளது அல்லது சிலவேளை சர்வசாதாரணமாக பாய்ந்துள்ளது தெரிகிறது. இந்த கிரகத்தின் படங்கள் எண்ண முடியாத ஆற்று படுகைகளையும். வெள்ளப்பெருக்கு சமவெளிகளையும், டெல்டா பகுதிகளையும் வெளிப்படுத்துகின்றன.

கியூரியாசிட்டி விண்வெளி ஊர்தி ஆய்வு செய்த காலெ கார்டர் பகுதியில் நிலையான ஏரிகள் இருந்ததற்கான உறுதியான சாட்சியத்தை இந்த ஊர்தி கண்டறிந்துள்ளது.



இருப்பினும், இருக்கின்ற சில சாட்சியங்களின் அடிப்படையிலான காலநிலை மாதிரிகளில், நிர்ம நிலையில் தண்ணீர் அதிகம் இருக்க செய்யும் அளவுக்கு எந்த மாதிரியான வெப்பநிலை செவ்வாய் கிரகத்தில் நிலவியது என்பதை குறிப்பது கடினமாகவே உள்ளது. அதிகமானவை பனியாக உறைந்திருந்திருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

"இந்த ஆறுகளையும், ஏரிகளையும் பார்க்கின்ற புவி அமைப்பு ஆய்வு வல்லுநர்கள் மற்றும் இதற்கு ஒத்ததான வளிமண்டல நிலைமையை கணிக்க முடியாத கண்டுபிடிப்போருக்கு இடையில் எப்போதும் முறுகல் நிலையே இருந்து வந்துள்ளது" என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் திறந்தவெளி பல்கலைக்கழக கிரக விஞ்ஞானி டாக்டர் மேத் பால்மி தெரிவிக்கிறார்.

"உண்மையில் கரியமில வாயு பற்றிய விவரங்கள் நமக்கு தெரியாது என்பதால் கண்டுபிடிப்போர் பயனுள்ளதை அறிய வருவது இதுவரை தடுக்கப்பட்டு வந்தன. இதனால் மாவென் செயற்கைக்கோள் முடிவுகள் தலைசிறந்தவையாக அமைந்துள்ளன".

"செவ்வாய் கிரக வளி மண்டலத்தில் தண்ணீரை ஆவியாக்கிவிடக்கூடிய அழுத்தம் இருப்பதை கண்டுபிடித்திருப்பது மிகவும் பயனுள்ளது. இத்தகைய பிரச்சனைகள் சிலவற்றை நாம் நன்றாக சமாளிக்க முடியவில்லை என்றால் இன்னொரு சுற்று காலநிலை பற்றிய கண்டுபிடிப்பு தேவை என்பது உறுதியாகியுள்ளது". 

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...