ஓட்டுனர் இல்லாமல் பறக்கும் 'ஆம்புலன்ஸ்'

நெரிசலில் சிக்கித் தவிக்கும் ஆம்புலன்ஸுக்கு இனி விடைகொடுக்கும் நேரம் வந்துவிட்டது. அமெரிக்க நிறுவனம் ஒன்று பறக்கும் ஆம்புலன்சை உருவாக்கியுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அக்ரோ நிறுவனம் ஒன்று பறக்கும் ஆம்புலன்சை உருவாக்கியுள்ளது. நோயாளிகள் ஆபத்தான நிலையில் இருக்கும் போது உதவி புரியவே இந்த ட்ரோன் ஆம்புலன்ஸை கண்டுபிடித்திருக்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள்.

நோயாளியையும், உடன் ஒரு மருத்துவ உதவியாளரையும் சுமந்துக்கொண்டு பறக்கும் வகையில் இந்த ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் உள்ளே லைவ் கேமரா வசதியும், ஆடியோ கனெக்‌ஷனும் இருப்பதால், மருத்துவமனைக்கு வந்து சேர்வதற்குள் நோயாளியின் நிலைமையை ஆராய்ந்து, தகுந்த மருத்துவ ஆலோசனைகளை உதவியாளருக்கு கொடுக்க முடியும்.

இந்த ட்ரோன், மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். அவசர காலத்தில் சிட்டாய் பறக்கும் இந்த ட்ரோனுக்கு ஓட்டுனர் இல்லை மற்றொரு ஆச்சரியம். ஜி.பி.எஸ் வைத்து லொகேஷனை அடையாளம் கண்டு, தானாக பறந்து செல்கிறது. ட்ரோன் ஆம்புலன்ஸ் தற்போது பரிசோதனையில்தான் உள்ளது. விரைவில் பொது பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதன் விலை சுமார் ஆறரை கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலை அதிகம் என்றாலும், விலைமதிப்பற்ற பல மனித உயிர்கள் இதனால் காப்பாற்றப்படும் என்கிறார்கள் அந்த ஆம்புலன்ஸ் வடிவமைப்பாளர்கள்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...