தியாகி திருப்பூர் குமரன் மார்க்கெட் பகுதியில் திருப்பூர் குமரன் சிலை அமைக்க வேண்டும் என கோரி ஆட்சியரிடம் மனு

கோவை பெரிய கடை வீதியில் உள்ள தியாகி திருப்பூர் குமரன் மார்க்கெட் பகுதியில் திருப்பூர் குமரன் சிலை அமைக்க வேண்டும் என ராஷ்ட்ரிய ஹிந்து பரிஷத் அமைப்பினர், திருப்பூர் குமரன் வேடம் அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை பெரிய கடை வீதியில் டி.கே.மார்க்கெட் என அழைக்கப்படும் திருப்பூர் குமரன் மார்க்கெட் செயல்பட்டு வருகின்றது. சுதந்திரத்திற்காக போராடிய திருப்பூர் குமரன் பெயரில் அமைக்கப்பட்ட இந்த மார்க்கெட் பகுதியில் திருப்பூர் குமரன் சிலை அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவரக்ள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஷ்ட்ரிய ஹிந்து பரிஷத் அமைப்பினர் திருப்பூர் குமரன் வேடம் அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

திருப்பூர் குமரன் பெயரில் மார்க்கெட் பெயர் வைக்கப்பட்டதை பலரும் மறந்து போன நிலையில், திருப்பூர் குமரனை நினைவுபடுத்தும் விதமாக மார்க்கெட் வளாகத்தில் அவரது சிலை அமைக்க வேண்டும் என அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...