ஆம் ஆத்மி கட்சி சார்பில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டுவர மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை


கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நமது மாவட்டத்தில் இன்னும் சிறப்பான முறையில் செயல்படுத்திட வேண்டும் என்றும் கோவை மாவட்ட ஏழை பெற்றோர்களின் சார்பாகவும், முந்திய கல்வி ஆண்டில் ஏற்பட்ட அனுபவங்களை கருத்தில் கொண்டு கோவை ஆம் ஆத்மி  கட்சி சார்பில் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் முன் வைத்தனர்.



அதில், அனைத்து விண்ணப்பங்களும் இணையத்தளத்திலோ அல்லது மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமோ விண்ணப்பிக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும்.  கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி உள்ள ஒவ்வொரு விண்ணப்பங்களுக்கும் வரிசை எண் கட்டாயமாக இருக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் முன்பாக கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தகவல் பலகை வைத்தல் வேண்டும். பெற்றோர்களிடம் இருந்து எந்த வகையிலும் பணம் வசூல் செய்யக்கூடாது. மாவட்ட நிர்வாகம் அல்லது மாவட்ட கல்வித்துறை இச்சட்டம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில் பள்ளியில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சேர்க்கை பற்றிய விவரங்களை பள்ளியின் முன்புறம் தகவல் பலகையில் வைக்க வேண்டும். இந்த சட்டத்தை முழுமையாக மக்கள் பயன்பெறும் வகையில் இதற்கு என பிரத்யோக உதவி மையம் அல்லது தொடர்பு எண் அமைத்தல் வேண்டும். இந்த சட்டத்தின்படி மாணவர் சேர்க்கையை மறுக்கும் பள்ளிகளில் மீது கடும் நடவடிக்கையும் அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என்று அறிக்கையை வெளியிட வேண்டும். 

இதுபோன்ற சட்டதிட்டங்கள் நமது அண்டை நாடுகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், நமது மாவட்டம் தமிழகத்திற்கே முன்னோடி மாவட்டமாக திகழ்ந்திட இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட மக்கள் சார்பாக கோவை ஆம் ஆத்மி கட்சி இணைச் செயலாளர் தாமோதரன் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார். 

Newsletter

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...