வேலை வாய்ப்பு முகாமிற்கு குறித்த நிறுவனங்கள் வராததால் மாணவர்கள் முற்றுகை!


கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே தனியார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டுவருகிறது.

இந்த கல்லூரியில், சிங்காநல்லூர் அருகே உள்ள 'ப்ரைட்ஸ் ஈவன்ட்ஸ்' என்ற தனியார் வேலைவாய்ப்பு அமைப்பினர்  ஒருங்கிணைத்த வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை தொடங்கியது. இந்த முகாமில் கலந்து கொள்ள கோவை ஈரோடு, திருப்பூர் மற்றும் சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.



பல முன்னனி நிறுவனங்கள் வரும் என்றும், வேலைவாய்ப்பு உருவாக்கித்தரப்படும் என்றும் ப்ரட் ஈவன்ட்ஸ் என்ற தனியார் அமைப்பின் சார்பில் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து ரூ.300 வசூலித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வேலை வாய்ப்பு முகாமிற்கு 26 பெரிய நிறுவனங்கள்  வருதாக கூறப்பட்ட எந்த நிறுவனமும் வரவில்லை என்றும், தங்களிடம் இருந்து வசூலித்த பணத்தை திரும்ப தர வலியுறுத்தியும்  மாணவர்கள் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.



இதை தொடர்ந்து, சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...