ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியில் "கணினி கருத்து பரிமாற்றம் மற்றும் தகவல் பரிமற்றதிற்கான" கருத்தரங்கு நிறைவுவிழா


கோவையில் உள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 2017ம் ஆண்டின் (ICCCI) கணினி கருத்து பரிமாற்றம் மற்றும் தகவல் பரிமற்றதிற்கான அகில உலக கருத்தரங்கு நிறைவுவிழா இன்று நடைபெற்றது. நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக ஸ்காவா சிஸ்டம்ஸ் துணைத் தலைவர் முரளி கிருஷ்ணன், தலைமை வடிவமைப்பாளர் குமார் மாதவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 



இந்நிகழ்ச்சியில், கணினி பொறியியல் துறைத்தலைவர் கண்ணம்மாள் வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் தாளாளர் தங்கவேலு தனது உரையில் மாணவர்கள் தங்கள் கல்லூரி பருவத்திலேயே ஒரு தொழிலதிபராகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் சிந்தித்து செயல்பட வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரைக் கூறினார். சிறப்பு விருந்தினர் குமார் மாதவன் பேசுகையில், மாணவர்கள் கல்லூரி பாடங்களை புரிந்து கற்க வேண்டும் மேலும் அவற்றை ஆராய்ச்சி நோக்கத்துடன் அனுக வேண்டும் என்று கூறினார். அவரைத் தொடர்ந்து முரளி கிருஷ்ணன் கூறுகையில், தொலைபேசி வர்த்தகம் இன்றைய காலகட்டத்தில் மிகவும் இன்றியமையாததாக விளங்குகிறது. மேலும் மாணவர்கள் வெற்றியாளர்களாக இருக்க வேண்டுமெனில் தொழில்நுட்பத்தில் தொலைநோக்கு பார்வை இருக்க வேண்டும் எனக் கூறினார். 



இறுதியில், இக்கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு விருதுகளும், சன்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. தகவல் தொடர்பியல் துறைத்தலைவர் பிரகாஷ் நன்றியுரைக் கூறினார். 



Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...