உதவி பேராசிரியை கழுத்து அறுக்கப்பட்டு, தீ வைத்து எரித்து கொலை- காவல் துறை தீவிர விசாரணை


கோவை அருகே இருகூரில் உதவி பேராசிரியை லதா, அவரது  வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தவர் லதா. இவரது கணவர் சிவலிங்கத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவை இருகூர் ஐ.ஓ.பி காலனி பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், இன்று காலை லதாவின் பக்கத்து வீட்டை சேர்ந்த ராணி என்பவர் லதாவின் வீட்டிற்கு சென்ற போது உடல் முழுவதும் எரிந்த நிலையில் லதா இறந்து கிடந்துள்ளார். மேலும் கழுத்து அறுக்கப்பட்டதற்கான தடயங்களும் இருந்துள்ளது.

இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சம்பவம் நடந்த இடத்தின் அருகே சாம்பார் பொடி தூவப்பட்டு இருந்ததும், உதவி பேராசிரியரை லதா நிர்வாண நிலையில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், அவரை கற்பழித்து கொலை செய்து பின் எரித்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகின்றனர். 

மேலும், இறந்த பேராசிரியையின் வீட்டில் இருந்து பொருட்கள் எதுவும் திருடப்பட்டு இருக்கின்றதா என்பது குறித்தும், வீட்டிற்கு யார் வந்து சென்றுள்ளார்கள் என்பது குறித்தும் சிங்காநல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...