வ.ஊ.சி. உயிரியல் பூங்காவை பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் மாநகராட்சி வ.ஊ.சி. உயிரியல் பூங்காவை பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில்:- "கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட நேரு விளையாட்டு அரங்கம் அருகில் வ.ஊ.சி. உயிரியல் பூங்கா உள்ளது. இந்த வ.ஊ.சி. உயிரியல் பூங்காவை பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகள் தொடர்பாக கோவை மாவட்ட வன அலுவலர், கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள், பூங்கா வடிவமைப்பாளர் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வ.ஊ.சி. உயிரியல் பூங்காவை பொது மக்களை கவரும் விதத்தில் தரம் உயர்த்தவும், புதுப்பொலிவுடனும் தாவரவியல் மற்றும் உயிரியல் பூங்காவாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இக்கூட்டத்தில் வ.ஊ.சி. உயிரியல் பூங்காவை புதுப்பிப்பதற்காக பூங்கா வடிவமைப்பு ஆலோசகர் கே.சிரில் ரூப்ஸ் செயல்திட்ட அறிக்கை பற்றி விளக்கிக் கூறினார். பூங்காவை புதுப்பிப்பதற்கான முதல் தொகுதி செயல் திட்ட அறிக்கை அனுப்பி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இரண்டாம் தொகுதி செயல் திட்ட அறிக்கை விரைவில் அனுப்பப்படவுள்ளது. மேலும், இரண்டாம் தொகுதி செயல் திட்ட அறிக்கையில் பூங்கா கட்டமைப்பு வசதிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு மூலம் செயல்படுத்தப்படும்.

மேலும், கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவையான நிதி ஆதாரத்தை பற்றி கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும். மேலும், மத்திய பூங்காவில் அதிகாரகளின் ஒப்புதல் பெற்றப்பின் நகராட்சி நிர்வாக ஆணையர் அனுமதியுடன் வேலையை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார். 

இக்கூட்டத்தில், கோவை மாவட்ட வன அலுவலர் ராமசுப்ரமணியன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, வனத்துறை துணை இயக்குநர் மற்றும் கால்நடை அலுவலர் மனோகரன், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் பெருமாள்சாமி, பூங்கா வடிவமைப்பு ஆலோசகர் கே.சிரில் ரூப்ஸ், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், நகரமைப்பு அலுவலர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...