வால்பாறையில் கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்ட மிலாது விழா

வால்பாறையில் சுன்னத் ஜமா அத் ஜுமா மசூதி மதரச மஹாலில் மிலாது விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு ஹாஜி. பூக்கோயதங்கல் தலைமை வகித்தார். ஹாஜி. என்.கே.கமாலுதீன் முத்தவல்லி, ஜனாப். அல்லாஜ் தலைவர் பி.ஆர்எஸ். அப்துல் காதர், செயலாளர் பஷீர் அஹமது, இமாம் இப்ராஹிம் சஃகாபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 



முன்னதாக மவுலூதும், தப்ரூக் விநியோகமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, முனவ்விருல் இஸ்லாம் மதரசா மாணவர்களின் தப்புமுட்டு, நபிகள் நாயகம் பற்றி சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில், வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை துணை செயலாளர் சேரன் யூசுப், குஞ்சுமுகமது, மனாப் ஜமாஅத் கமிட்டியினர் ரிலீப் கமிட்டியினை செய்திருந்தனர். 

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை உஸ்தாத் மார்கள் அபூபக்கர், மஜீத் ஷெபீக் ஆகியோர்கள் செய்துவைத்தனர். முகமது முன்னின்று நடத்தினார். விழாவில் 50-க்கும் மேற்பட்ட ஏழை விதவைகள் மற்றும் கணவனால் கவிடப்பட்ட பெண்களுக்கு ஆடைகள் வழங்கப்பட்டது. இறுதியில் முகமது ஜாபர் நன்றி கூறினார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...