எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரியில் “சிகரங்களை நோக்கி” தன்னம்பிக்கை பயிலரங்கம்

கோயமுத்தூர் எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி கலையரங்கத்தில் கல்லூரியின் தமிழ் மன்றம் மற்றும் இளைஞர் சக்தி மையம் இணைந்து “சிகரங்களை நோக்கி 2016” என்ற மாணவர்களுக்கான சிறப்பு தன்னம்பிக்கை பயிலரங்கம் நடைபெற்றது. எஸ்.என்.ஆர்.சன்ஸ் கல்லூரி உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறைத்தலைவர் தீனா தலைமையேற்றார். இவ்விழாவில் இளைஞர் சக்தி மையம் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். விழாவின் சிறப்பு விருந்தினராக லட்சியத்தென்றல் அரிமா லட்சுமிகாந்தன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்; உலக நாடுகளில் 60% இளைஞர்களைக் கொண்ட ஒரே நாடு இந்தியாதான். தற்போது இந்தியர்கள் அறிவியல், நுண்ணறிவுத்திறன் ஆகியவற்றில் பல நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்கின்றனர். மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட பல வெளிநாட்டு முன்னணி நிறுவனங்களில் பெருமளவில் இந்தியர்கள் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கின்றனர். மரபுரீதியாகவே தமிழர்கள் நுண்ணறிவுத் திறன் பெற்றவர்கள் என்பதை உணர்ந்து உலகின் பல வெற்றியாளர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டு மாணவர்கள் தற்கால சவால்களை எதிர்கொண்டு தன்னம்பிக்கையுடன் வாழ்வில் வெற்றிபெறவேண்டும். வாழ்க்கையில் ஒரு மனிதன் எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதிருக்க வேண்டும்” என்றார்.

இவ்விழாவில் கவிஞர் அன்புசிவா, யு.ஐ.டி. பேராசிரியர் ஆனந்தபார்த்திபன், பேச்சாளர் ஆனந்தி ஆகிய ஆகியோர் சிறப்பு பயிற்சியாளர்களாக கலந்துகொண்டார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பல்வேறு கல்லூரி  துறைத் தலைவர்களும்  பேராசிரியர்களும் கலந்துகொண்டனர். விழாவின் இறுதியில் பல்வேறு கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவினை தமிழ்த்துறைத் தலைவர் விஸ்வநாதன்  சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...