டெங்கு காய்ச்சலால் ஒரு வயது பெண் குழந்தை பலி


திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கீர்த்தனா என்ற ஒரு வயது குழந்தைக்கு கடந்த ஒரு வாரகாலமாக காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் கீர்த்தனாவின் பெற்றோர் அவரை திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

தொடர்ந்து, அந்த மருத்துவமனையின் பரிந்துரையின் பேரில் கடந்த 24ம் தேதி கீர்த்தனா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 25ம் தேதி அதிகாலை பறிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து வழக்குப்பதிந்த பந்தய சாலை போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த பரிசோதனையின் முடிவு நேற்று வெளியானது. அதில், கீர்த்தனாவுக்கு டெங்கு காய்ச்சல் இருந்ததும். அதனால் அவர் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. 

கடந்த ஒரு மாதகாலமாக டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் எடுத்துவரும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது அம்மாவட்ட மக்களை பீதியடையச்செய்துள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...