மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக மாற்றுத் திறனாளிகளுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெறும் விதமாக வேலை அளிப்போர், வேலை தேடுவோர் சந்திப்பு நிகழ்ச்சி வரும் டிசம்பர் 30 ம் தேதியன்று காலை 10.30 மணி முதல் 4 மணி வரை நடைபெறவுள்ளது.

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ள இம்முகாமில், படிக்காதவர்கள், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, அனைத்து பட்டதாரிகள், ஐடிஐ மற்றும் டிப்பளமோ உள்ளிட்ட கல்விகள் பயின்று சான்றிதழ் பெற்றவர்கள் கல்வியறிவுடையவர்கள் என அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்கலாம்.

இந்நிகழ்ச்சியில், தனியார் துறையில் வேலையளிப்போர் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்ய உள்ளனர்.

இத்தனியார் வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வோர், வேலையளிப்போருக்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. மேலும், இதன் மூலம் வேலைபெரும் மாற்றுத் திறனாளிகளின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

இதில் பங்கேற்று வேலை பெற்று மாற்றுத்திறனாளர்கள் பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...